உலகம்

ஈரானுடன் மீண்டும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை – ட்ரம்ப் அறிவிப்பு

  • August 3, 2026
  • 0 Comments

06 மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் மற்றொரு பகுதியாக ஈரானுடன் புதிய சுற்று பேச்சுவாரத்தைகளை தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்ப் புதிய பேச்சுவார்த்தைகளை அறிவித்ததைத் தொடர்ந்து, இன்றைய தினம் ஆசியாவில்  எண்ணெய் விலைகள் சரிந்தன. இதற்கமைய வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய் ஒன்றின் விலை, 4.7 சதவீதம் சரிந்து 80.72 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது. முன்னதாக ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும்வரை ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்திவைப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார். […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

06 மணிநேர போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா முன்மொழிவு

  • July 5, 2026
  • 0 Comments

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே சமீபகாலமாக மோதல் வலுத்து வருகின்ற நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர புட்டின் 06 மணிநேர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை பரிமாற்றிக் கொள்வதற்காக அவர் இந்த போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு உக்ரைன் இன்று நண்பகல் பதிலளிக்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடக்கு டொன்பாஸில் உள்ள மிக முக்கியமான தளவாட மற்றும் பாதுகாப்பு மையங்களில் ஒன்றான கான்ஸ்டான்டினோவ்காவில் […]

உலகம்

லெபனானில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது

  • June 19, 2026
  • 0 Comments

லெபனானில் செயல்படும் புரட்சிகரக் குழுவான ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர் நிறுத்தம் இன்று (19) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவரின் அறிக்கையை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

உலகம் முக்கிய செய்திகள்

அதிகரிக்கும் பதற்றம் – போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தம்!

  • June 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் ஈரான் நிறுத்தி வைத்துள்ளது. ஈரானின் முக்கிய கோரிக்கைகளில்  லெபானில் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும். இருப்பினும் அங்கு இஸ்ரேல் கோரத் தாண்டவம் ஆடத்துவங்கியுள்ளது. உச்சக்கட்ட தாக்குதல்களை நடத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு துருப்புகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் லெபனானின் அனைத்து பகுதிகளிலும் அமைதி ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளதுடன்,  மத்தியஸ்தர்கள் மூலமான பேச்சுவார்த்தையையும் நிறுத்தியுள்ளது. போர் நிறுத்தத்தின் ஒரு முனையில் ஏற்படும் […]

ஐரோப்பா

03 நாள் போர் நிறுத்தம் : 1000 கைதிகள் பரிமாற்றம்!!

  • May 9, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் வெற்றிநாள் கொண்டாட்டத்தின்போது உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தாது என ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரேனியப் படைகள் மொஸ்கோவின் செஞ்சதுக்கத்தைத் தாக்காது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். 03 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆணையொன்றை வெளியிட்டதை தொடர்ந்து ஜெலன்ஸ்கி மேற்படி தெரிவித்துள்ளார். அதேநேரம் போர் நிறுத்தத்தையொட்டி இரு தரப்பில் இருந்தும் 1000 கைதிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளனர். நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் யூனியனின் வெற்றியின் 81வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், […]