ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் பல்பொருள் அங்காடிகளை குறிவைத்து சைபர் தாக்குதல்

பெல்ஜியம், அயர்லாந்து, லக்சம்பர்க், ஸ்வீடன் மற்றும் எஸ்டோனியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டும் அமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹேக்கர்கள் இரவோடு இரவாக குளிரூட்டும் அலகுகளின் பாதுகாப்பை மீறி, ஆவியாக்கிகளை (evaporators) பனி நீக்கும் முறைக்கு (defrost mode) மாற்றுவதன் மூலம், குளிர்சாதனப்பெட்டி மற்றும் உறைவிப்பான் ஆகியவற்றின் வெப்பநிலையை எதிர்பாராதவிதமாக 50°C வரை உயர்த்தியுள்ளனர்.

இதன்காரணமாக முக்கியமான பொருட்கள் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் பிரான்சில் இதே போன்றவொரு இணையவழித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

அங்கு ஹேக்கர்கள் நூற்றுக்கணக்கான கடைகளில் உள்ள குளிரூட்டும் அலகுகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர்.

சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் குளிரூட்டும் சாதனங்கள் வழங்குநர்கள் தங்கள் அமைப்புகளைப் பாதுகாக்கவும், மீறல்களின் அளவை மதிப்பிடவும் பணியாற்றி வருவதால், விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்