அதிகரிக்கும் பதற்றம் – போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தம்!
அமெரிக்காவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் ஈரான் நிறுத்தி வைத்துள்ளது.
ஈரானின் முக்கிய கோரிக்கைகளில் லெபானில் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
இருப்பினும் அங்கு இஸ்ரேல் கோரத் தாண்டவம் ஆடத்துவங்கியுள்ளது. உச்சக்கட்ட தாக்குதல்களை நடத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு துருப்புகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் லெபனானின் அனைத்து பகுதிகளிலும் அமைதி ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், மத்தியஸ்தர்கள் மூலமான பேச்சுவார்த்தையையும் நிறுத்தியுள்ளது.
போர் நிறுத்தத்தின் ஒரு முனையில் ஏற்படும் மீறல் என்பது “அனைத்து முனைகளிலும்” ஏற்படும் மீறலாகும் என்றும், அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தம் என்பது “லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் சந்தேகத்திற்கு இடமின்றிய போர் நிறுத்தத்தை குறிப்பதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ( Abbas Aragchi) தெரிவித்துள்ளார்.




