03 நாள் போர் நிறுத்தம் : 1000 கைதிகள் பரிமாற்றம்!!
ரஷ்யாவின் வெற்றிநாள் கொண்டாட்டத்தின்போது உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தாது என ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரேனியப் படைகள் மொஸ்கோவின் செஞ்சதுக்கத்தைத் தாக்காது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
03 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆணையொன்றை வெளியிட்டதை தொடர்ந்து ஜெலன்ஸ்கி மேற்படி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் போர் நிறுத்தத்தையொட்டி இரு தரப்பில் இருந்தும் 1000 கைதிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் யூனியனின் வெற்றியின் 81வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ரஷ்யாவில் வெற்றிதினக் கொண்டாட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.





