ஐரோப்பா

ஸ்பெயின் கேனரி தீவுகளில் 07 புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் மீட்பு

ஐரோப்பிய நாடுகளில் இலையுதிர் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் சட்டவிரோத படகு பயணங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக புலம்பெயர்ந்தோரின் படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஸ்பெயினின் கேனரி தீவுகளின் கடற்கரையில் குறைந்தது ஏழு புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 380-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தினம் லான்சரோட் Lanzarote மற்றும் எல் ஹியரோ El Hierro  கடற்கரைகளில் மேலும் 250 புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தோரின் வருகை  அக்டோபர் மாதத்தில்   கணிசமாக அதிகரித்த போதிலும்,   கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்