ஐரோப்பா

பிரித்தானியாவில் ஆட்கடத்தல் தொடர்பான கைது நடவடிக்கைகள் அதிகரிப்பு!

  • May 18, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் ஆட்கடத்தல் தொடர்பான கைது நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய குற்றவியல் முகமை (NCA) தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் மாத்திரம் 55 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில், இந்த முகமை இங்கிலாந்திலும் வெளிநாடுகளிலும் 300 கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 190 கைதுகளை விட கணிசமான உயர்வாகும். இந்த அதிகரிப்புக்கு, வளங்களின் விரிவாக்கமே காரணம்  என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தேடப்படும் 12 குற்றவாளிகள் – ஸ்பெயின் செல்வோருக்கு எச்சரிக்கை!

  • May 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் தேடப்படும் 12 குற்றவாளிகள் ஸ்பெயினில் தங்கியிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் முகமை (NCA) ,  ஸ்பானிய காவல்துறை மற்றும் கிரைம்ஸ்டாப்பர்ஸ் ஆகியவை இன்று தங்களின் சமீபத்திய “குற்றவாளிகள் பட்டியலை” வெளியிட்டன. இதற்கிடையே ‘ஆபரேஷன் கேப்டூரா’வின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் கீழ் 111 குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களில் 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குற்றவாளிகள் பெரும்பாலும் ஸ்பெயினில் உள்ள வெளிநாட்டினரை தேர்ந்தெடுத்து சட்டவிரோத செயல்களை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தலைமைப் போட்டி : கூட்டாக கையெழுத்திட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

  • May 13, 2026
  • 0 Comments

தற்போதைய அரசியல் சூழலில், “இது  தலைமைப் போட்டிக்கான நேரமல்ல” என்று வலியுறுத்தி, சர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டாம் எனக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். ஆளும் தரப்பில் அங்கம் வகித்த நான்கு அமைச்சர்கள் பதவிவிலகியுள்ள நிலையில், 80க்கும் மேற்பட்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. இந்த அழுத்தங்கள் இருந்தபோதிலும், சர் கெய்ர் தனது அமைச்சரவையிடம் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் இவ்வாண்டின் இறுதிக்குள் ஆட்சிமாற்றம் ஏற்படுமா? நெருக்கடியில் ஸ்டாமர்!

  • May 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் உள்ளுராட்சி தேர்தலில் தொழிற்கட்சி மிகப் பெரிய அளவில் தோல்வியை தழுவியுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான சேர் கெய்ர் ஸ்டாமர் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார். தோல்விக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தும் எம்.பிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தன்னுடைய சொந்தக் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிய போதிலும், பிரதமர் பதவியில் நீடித்துப் போராடப் போவதாக அவர் உறுதியளித்துள்ளார். பிராட்போர்டு கிழக்கு தொகுதியின் தொழிலாளர் கட்சி […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் உணவகம் ஒன்றின் வெளியே அமிலத் தாக்குதல்!

  • May 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கிரேட்டர் மென்செஸ்டரில்  (Greater Manchester) உள்ள துரித உணவகம் ஒன்றுக்கு வெளியே அமிலத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்படி சம்பவம் நேற்று மாலை ஆஷ்டன் (Ashton ) நகர மையத்தில் உள்ள  துரித உணவகத்திற்கு வெளியே நடந்ததாகத் தெரிகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  குறித்த பகுதி தற்போது பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில், அரிக்கும் தன்மை கொண்ட ஒரு பொருள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட […]

ஐரோப்பா

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்தது பிரித்தானியா!

  • May 5, 2026
  • 0 Comments

ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஆட்கடத்தல் செய்து போரில் ஈடுபடுத்தும் ரஷ்ய வலையமைப்பு கும்பல்களை இலக்காகக் கொண்டு பிரித்தானியா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த வலையமைப்புகள், நைஜீரியா, சிரியா மற்றும் யேமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தனிநபர்களைப் பொய்யான வாக்குறுதிகள் மூலம் கவர்ந்து, பின்னர் அவர்களை உக்ரைனில் உள்ள போர்க்களங்களுக்கு அனுப்புவதாகக் கூறப்படுகிறது. ரஷ்ய ட்ரோன் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து மக்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் […]

ஐரோப்பா

லண்டனில் உச்சபட்ச வெப்பநிலை பதிவு!

  • May 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் சில பகுதிகளில், குறிப்பாக லண்டன் மற்றும் ஈஸ்ட் ஆங்லியாவில் ( East Anglia) வெப்பநிலை 27°C வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் மிகவும் வெப்பமான நாளாகவும், ஹவாயில் உள்ள ஹோனோலுலுவை (Honolulu) விட அதிக வெப்பம் கொண்டதாக அமையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கிலிருந்து வரும் ஈரப்பதமான காற்று, கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளுக்கு சூரிய ஒளியைக் கொண்டு வருவதால் இந்த வெப்பமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வாளர் சைமன் பார்ட்ரிட்ஜ் ( […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலின் அளவு கடுமையாக உயர்வு!

  • May 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலின் அளவு   ‘கணிசமான’ நிலையிலிருந்து ‘கடுமையான’ நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த ஆறு மாதங்களில்  பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கருதப்படுகிறது. வடக்கு லண்டனில் இரண்டு யூதர்கள் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கோல்டர்ஸ் கிரீன் தாக்குதலின் விளைவாக மட்டும் இந்த அச்சுறுத்தலின் அளவு அதிகரிக்கப்படவில்லை என்றும்,  மாறாக  பரந்த இஸ்லாமிய மற்றும் தீவிர வலதுசாரி” அச்சுறுத்தல்களின் காரணமாகவும் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தீவிர விசாரணைகளின் கீழ் 09 பேர் கைது!

  • April 29, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பாலியல் வன்கொடுமை, கட்டாயத் திருமணம் மற்றும் நவீன அடிமைத்தனம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கா, மெக்சிகன், இத்தாலி , ஸ்பெய்ன், ஸ்வீடன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 06 ஆண்கள் மற்றும் 03 பெண்கள் உள்ளடங்களாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள், க்ரூவில் உள்ள வெப் ஹவுஸை தளமாகக் கொண்ட ‘அமைதி மற்றும் ஒளியின் அஹ்மதி மதம்’  (Ahmadi […]

ஐரோப்பா

உயிர் தியாகம் செய்ய அழைப்பு : சர்ச்சை பதிவால் பிரித்தானியாவில் பதற்றம்!

  • April 29, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் உள்ள ஈரானியர்கள் “தாய்நாட்டிற்காகத் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டும்” என்று தெஹ்ரான் தூதரகம் விடுத்த அழைப்பு குறித்து பெருநகர காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெளிநாடுகளில் வாழும் ஈரானியர்கள் ஆட்சிக்காகத் தியாகிகளாக மாற வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் ஒரு செய்தியைத் தூதரகத்தின் டெலிகிராம் சேனல் பதிவேற்றியதாக கூறப்படுகிறது. மேற்படி பதிவின் மீது நடவடிக்கை தேவையா என்பதை மதிப்பிடுவதற்காக, பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை தற்போது  ஆய்வு செய்து வருகிறது. அதேநேரம்  “ஜன்ஃபதா” அல்லது சுய தியாக […]