ஐரோப்பா

பிரித்தானியாவில் விசா பெற்றவர் உயிரிழந்தால் அவரை சார்ந்திருப்போர் நாடு கடத்தப்படும் அபாயம்!

  • April 26, 2026
  • 0 Comments

லண்டனில் வசித்து வரும் இந்திய பிரஜை ஒருவர் தற்போது நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளார். முகமது ஷெத்வாலா (mhammad Shethwala) மற்றும் அவரது மனைவியான சாதிகாபானு தபேலிவாலா (Sadikabanu Tapeliwala) ஆகியோர் கடந்த  2023 ஆம் ஆண்டில் லண்டனுக்கு குடிப்பெயர்ந்துள்ளனர். சாதிகாபானு அங்கு அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.  அதே ஆண்டில் அவர்களுக்கு பாத்திமா என்ற குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் இந்தியாவில் இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் தபேலிவாலாவும் அவரது இரண்டு […]

ஐரோப்பா

ஆப்கானிஸ்தானியர்களை நாடு கடத்தும் நடவடிக்கை : பிரித்தானியாவிற்கு உள்ள சவால்!

  • April 25, 2026
  • 0 Comments

தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டவர்களை ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்துவது தொடர்பாக தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood ) தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளின் திட்டங்களையும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தலிபான் நிர்வாகத்தை அரசாங்கம் அங்கீகரிக்காத நிலையில் இந்த நடவடிக்கை சவாலாக இருப்பதாக தெரிவித்த அவர், இது சாத்தியப்படும் பட்சத்தில்  குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தை  ஏற்படுத்தும் என்றும்  தெரிவித்தார். சிறிய படகுகள் மூலம் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தீயில் கருகி இரு குழந்தைகள் பலி!

  • April 25, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டனில் (Wolverhampton) உள்ள குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைப் பிரிவினர், அந்த வீட்டிலிருந்து 02 குழந்தைகளை மீட்டனர்.  இருப்பினும் குழந்தைகள் இருவரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு குழந்தைகளும் பெண் ஒருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் குறித்த  வீட்டைச் சுற்றி வளைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஐரோப்பா

ஃபாக்லாந்து தீவு சர்ச்சை : அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பிரித்தானியா அடிப்பணியுமா?

  • April 24, 2026
  • 0 Comments

ஃபாக்லாந்து ( Falkland Islands)  போன்ற ‘அரச ஆதிக்கப் பகுதிகளுக்கு’ அமெரிக்கா வழங்கும் தூதரக ஆதரவை ட்ரம்ப் நிர்வாகம் மறுமதிப்பீடு செய்யவுள்ளதாக வெளியான மின்னஞ்சல் தொடர்பில் டவுனிங் தெரு எதிர்வினையாற்றியுள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் சேர மறுக்கும் நேட்டோ கூட்டாளிகளுக்கு தண்டனை வழங்கும் விதமாக அமெரிக்காவின் ஆதரவு மறுமதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டவுனிங் தெரு, ‘ஈரான் போர் தொடர்பாக பிரிட்டன் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படாது’ என்றும், தீவுவாசிகளின் சுயநிர்ணய உரிமை […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியாவை இணைக்க உருவாகும் புதிய சட்டமூலம்!

  • January 7, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்துடன் , பிரித்தானியாவை மீளவும் இணைப்பதற்கு பிரதமர் கெய்ர் ஸ்டாமர் புதிய சட்டம் ஒன்றை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்துடன் இங்கிலாந்தை இணக்கப்படுத்த அமைச்சர்களுக்கு போதுமான  அதிகாரங்கள் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. பிரெக்ஸிட் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக முன்வைக்கப்படும் இந்த சட்டமூலம் உணவுத் தரநிலைகள், விலங்கு நலன் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு போன்ற சில விதிகளில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட விதிகளுக்கு ஏற்ப பிரித்தானிய அரசாங்கத்தை மாற்றும் நோக்கத்தை […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

சில நாடுகள் மீது விசா தடை – புதிய நடவடிக்கைக்கு தயாராகும் பிரித்தானியா!

  • December 28, 2025
  • 0 Comments

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த பிரித்தானிய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ருவாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகள் சட்டவிரோத குடியேறிகளை மீள பெறும் ஒப்பந்தத்திற்கு இணங்கவில்லை. இந்நிலையில் ஒப்பந்தத்திற்கு இணங்காத நாடுகள் மீது விசா தடை விதிக்கப்போவதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மஹ்மூத்தின் இந்த அதிரடி அறிவிப்பை தொடர்ந்து அங்கோலா மற்றும் நமீபியா ஆகிய இரு நாடுகளும் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட குற்றவாளி – தீவிர தேடலில் காவல்துறை!

  • October 25, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தவறுதலாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை தொடர்ந்து பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருந்தன. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எத்தியோப்பிய நாட்டவரான ஹடுஷ் கெர்பர்ஸ்லேசி கெபாடு ( Hadush Gerberslasie Kebatu) நாடு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் அதிகரிக்கப்படும் ஊதியம் – அரை மில்லியன் தொழிலாளர்கள் பயன்பெறுவர்!

  • October 22, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் ஒரு மணித்தியாலத்திற்கு வழங்கப்படும் ஊதியம் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பானது அரை மில்லியன் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பின்படி ஒருமணி நேரத்திற்கு வழங்கப்படும் ஊதியமானது £13.45 பவுண்ட்ஸ் ஆகவும் லண்டனில் £14.80 பவுண்ட்ஸ்  ஆகவும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய லண்டனில் 95 பென்ஸ் அதிகரிக்கப்படும் அதேவேளை பிற இடங்களில் 85 பென்ஸ் அதிகரிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலையின் அடிப்படையில் ஊதிய உயர்வை கணக்கிடும் அறக்கட்டளை, முழுநேரமாக வேலை செய்யும் ஊழியர் ஒருவர் ஆண்டிற்கு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் 1.1 மில்லியன் ஓய்வூதியதாரர்கள்!

  • October 22, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து ஈட்டப்படும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக HMRC இன் புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. புதிய புள்ளிவிபரங்களின்படி, நடப்பு நிதியாண்டில் 66 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 1,160,000 பேர் வருமான வரி செலுத்த வேண்டியுள்ளனர். இது கடந்த ஆண்டு 1,090,000 ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் 953,000 ஆகவும் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்த எதிர்பார்க்கப்படும் 2,640,000 பேரில் 44  […]

செய்தி

பிரித்தானியாவில் உயரும் பணவீக்கம் – பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விலை அதிகரிப்பு!

  • October 21, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் பணவீக்கம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 3.8 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கமானது 4 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இவ் அதிகரிப்பானது, கடந்த மாதம் எரிபொருள் விலைகள் அதிகரித்ததன் எதிரொலியாக இருக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் நாட்களில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலையும் கணிசமாக உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பணவீக்கமானது வரும் மாதங்களில் கடுமையாக வீழ்ச்சியடையத் தொடங்கும் என்று  […]