பிரித்தானியாவில் வார நாட்களில் தடைப்படும் ரயில் சேவைகள்
பிரித்தானியாவில் கடும் வெப்பநிலைக்கு உரிய சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில் சேவைகள் பாதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் அவசியமானால் மட்டுமே ரயில் பயணங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக தேம்ஸ்லிங்க் (Thameslink), கிரேட் நார்தர்ன் (Great Northern) மற்றும் சதர்ன் (Southern) சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் அவசியம் என்றால் மட்டுமே ரயில் பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வேகக் கட்டுப்பாடுகள் காரணமாக, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சேவைகள் குறைக்கப்படும் என்றும் குறைந்த அளவிலான ரயில்களே இயக்கப்படும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கேட்விக் எக்ஸ்பிரஸ் சேவையானது இரு நாட்களிலும் பிற்பகல் வேளையில் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விவரங்களை அறிய சேவை வழங்குநர்களின் இணையதளங்களைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




