பிரித்தானியாவின் பாதுகாப்பு செலவீனத்தை 80 பில்லியன் பவுண்ட்ஸாக உயர்த்த திட்டம்
பிரித்தானியாவின் பாதுகாப்பு செலவீனத்தை 2029 ஆம் ஆண்டுக்குள் 80 பில்லியனாக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் கெயர்ஸ்டாமர் முன்வைத்துள்ளார்.
ரஷ்யாவின் அச்சுறுத்தல் மற்றும் 03 ஆம் உலகப் போர் குறித்த அச்சம் காரணமாக புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்டாமர் அறிவித்துள்ளார்.
அவர் அறிவித்துள்ள திட்டங்களில் முக்கியமான 05 வாக்குறுதிகள் வருமாறு,
01. பிரித்தானியாவின் ஆயுதப்படைகளில் ஏற்பட்டுள்ள வலுவிழப்பை மாற்றியமைக்க அவர் உறுதியளித்துள்ளார்.
02. முன்னர் போதிய நிதி ஒதுக்கப்படாத பாதுகாப்புத் திட்டத்தை உருமாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார். (இது கடந்த ஆண்டின் மூலோபாய பாதுகாப்பு மறுஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, முக்கிய அரசாங்கப் பிரமுகர்களுடன் இணைந்து செம்மைப்படுத்தப்பட்டுள்ளது.)
03. பாதுகாப்புச் செலவினங்களை 2029-ஆம் ஆண்டுக்குள் £54 பில்லியனிலிருந்து கிட்டத்தட்ட £80 பில்லியனாகக் கணிசமாக அதிகரிக்க உறுதியளித்துள்ளார். (இது பிரித்தானியாவின் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க உயர்வாகும்.)
04. இந்த அதிகரித்த முதலீட்டிற்கான நிதி, பாதுகாப்புப் பத்திரங்கள் அல்லது அன்றாடப் பொதுச் சேவைகளை குறைப்பதில் இருந்து திறட்டப்படாமல், அரசாங்கத் துறைகள் முழுவதும் மூலதன வரவுசெலவுத் திட்டங்களை மறுஒதுக்கீடு செய்வதன் மூலம் திறட்டப்படும் எனக் கூறப்படுகிறது.
05. அதேநேரம் நவீன போர் உத்தியான ட்ரோன் தாக்குதல்களுக்கு 5 பில்லியன் பவுண்ட்ஸ் முதலீடு செய்யவும் அவர் இலக்கு வைத்துள்ளார்.





