ஐரோப்பா

பிரித்தானியா : வாகனங்களில் கொடிகளை பறக்கவிட்டால் அபராதம்

இங்கிலாந்தின்  கால்பந்து ரசிகர்கள் தங்கள் வாகனங்களில் கொடிகளைப் பறக்கவிட்டால், அவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பையின் போது தங்கள் கார்களில் கொடிகளைப் பறக்கவிடத் திட்டமிடும் ஓட்டுநர்களுக்கு, £2,500 வரை அபராதம் விதிக்கப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடரை முன்னிட்டு பல ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களில் கொடிகளை பறக்கவிட திட்டமிட்டிருக்கலாம்.

இருப்பினும், ஒரு வாகனத்தில் தவறான முறையில் கொடியைப் பறக்கவிடுவது சாலைப் பாதுகாப்புச் சட்டங்களை மீறுவதாகும்,

சாலை வாகனங்கள் (கட்டுமானம் மற்றும் பயன்பாடு) ஒழுங்குமுறைகளின்படி, வாகனத்தில் பொருத்தப்படும் எந்தவொரு பொருளும், தங்களுக்கும் மற்ற சாலைப் பயனாளர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதற்கமைய வாகனத்தில் கொடிகளைப் பாதுகாப்பாகப் பொருத்தாத ஓட்டுநர்களுக்கு £100 அபராதம் மற்றும் மூன்று தண்டனைப் புள்ளிகள் விதிக்கப்படும் அபாயம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்