பிரித்தானியாவில் சீக்கியர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா?
பிரத்தானியாவில் ஹென்றி நோவாக்கின் மரணத்தைத் தொடர்ந்து சீக்கிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
திக்வாவின் செயல்கள் சீக்கிய போதனைகளுக்கு முரணானவை என்று கூறி அவற்றைக் கண்டித்துள்ளனர்.
ஆனால், பிரத்தானியா முழுவதும் சீக்கியர்கள் பரவலாகக் குறிவைக்கப்படுவதாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக சீக்கியர்கள் வழிமறிக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதாக வரும் செய்திகளால், தங்கள் சமூகத்தினரிடையே அச்சம் நிலவுவதாக சீக்கியத் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், நோவாக்கின் இறுதித் தருணங்களைக் காவல்துறை கையாண்ட விதம் குறித்து மறுஆய்வு செய்யுமாறும், அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குருத்வாராக்களில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடு அளிக்கவும் நிதி உதவி போன்ற சீக்கிய சமூகத்திற்கான ஆதரவை வழங்குமாறு அவர்கள் அரசாக்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதியில், இனவெறித் தூண்டுதலுடன் நடத்தப்பட்ட தனித்தனித் தாக்குதல்களில் இரண்டு சீக்கியப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீக்கிய சமூகத்திற்கு மேலும் ஆதரவு தேவை என்றும் அச்சங்கத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



