கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசுப் பணி: அரசாணையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. இதையெடுத்து, “உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் அரசு வேலை வழங்கப்பட்டிருப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்; மேலும் இது தொடர்பான சிபிஐ விசாரணையைப் பாதிக்கும்” […]













