உலகம் செய்தி

அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி; 4 பேர் காயம்

அமெரிக்காவின் சியாட்டில் (Seattle) நகரின் மையப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உணவுத் திருவிழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பிஞ்சு குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்ததாகக் கூறியுள்ள காவல்துறையினர், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மற்றொரு சந்தேக நபருக்கும் தொடர்பிருப்பதாகக் காவல்துறையினர் நம்புவதாகவும், அந்த நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் சியாட்டில் காவல் துறையின் உதவித் தலைவர் டைரோன் டேவிஸ் (Tyrone Davis) ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும், இதனால் பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளதாகவும் டேவிஸ் தெரிவித்தார்.

மேலும் மருத்துவமனையில் உள்ள மற்ற 4 பேரின் நிலையும் தற்போது சீராக உள்ளதாக அவர் சேர்த்துக் கொண்டார்.

உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் (0100 GMT) பலமுறை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் முன்னதாக ‘சியாட்டான் டைம்ஸ்’ (Seattle Times) நாளிதழிடம் தெரிவித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி