இந்தியா செய்தி

பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி: இந்தியா எச்சரிக்கை

இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால், இந்தியாவின் பதிலடி கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால், இந்தியாவின் பதிலடி கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1999-ஆம் ஆண்டு காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்ததன் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் திகதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

லடாக்கிலுள்ள கார்கில் போர் நினைவிடத்தில் நடைபெற்ற 27-ஆவது வெற்றி தின விழாவில், போரில் வீரமரணமடைந்த 527 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றுகையில்:

இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால், இந்தியாவின் பதிலடி கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். பாகிஸ்தானுடன் இனி எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது; பேச்சுவார்த்தை என ஒன்று நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) குறித்து மட்டுமே இருக்கும்.

பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்தை தனது கொள்கையின் ஒரு பகுதியாகவே மாற்றியுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், தீவிரவாதிகளையும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசுகளையும் இந்தியா இனி தனித்தனியாகப் பார்க்காது என்றும் எச்சரித்தார்.

மேலும், இதுகுறித்து ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்ட அமைச்சர், தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்குத் தனது ஆழ்ந்த மரியாதையைச் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி