பாதாள குழு குறித்து நாமல் சர்ச்சைக் கருத்து
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
“அரசாங்கத்தால் போஷிக்கப்படும் குற்றவாளிக் கும்பலொன்று உள்ளது. அவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இது தொடர்பில் அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும்.
பாதாளக் குழுக்களை ஒடுக்குவதற்குப் பதிலாக, எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் பணியையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. பாதுகாப்பு பிரதிமைச்சரின் கூற்றுகள் இதனையே பிரதிபலிக்கின்றன.
தற்போதைய பொலிஸ் மா அதிபர், பொலிஸ் துறையை அரசியல்மயமாக்கி வருகின்றார். அதேவேளை, நீதித்துறையின் சுயாதீனத்திற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும்” என்று நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.




