யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை செய்தி

யாழ். தீவக மனிதப் புதைகுழி: நிதி ஒதுக்கீடு செய்யத் தயார் என OMP அறிவிப்பு

  • July 29, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வடக்கிலுள்ள ஐந்து இடங்களில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டு நியாயமான விசாரணை நடத்துமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தாக்கல் செய்த வழக்கு, நேற்றைய தினம் (ஜூலை 28) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. […]

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸி ஹௌலஹான் தலைமையிலான காங்கிரஸ் தூதுக்குழு, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை செய்தி

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் இலங்கை விஜயம்

  • July 29, 2026
  • 0 Comments

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸி ஹௌலஹான் தலைமையிலான காங்கிரஸ் தூதுக்குழு, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கையுடனான அமெரிக்காவின் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பகிரப்பட்ட முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்லவும், இந்தக் குழு இலங்கை வந்துள்ளது. அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரியான ஹௌலஹான், காங்கிரஸ் ஆயுத சேவைகள் குழுவின் உறுப்பினராகவும், இராணுவப் பணியாளர்கள் மீதான துணைக்குழுவின் தரவரிசை உறுப்பினராகவும், அவையின் புலனாய்வுக்கான நிரந்தரத் தெரிவுக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். கொழும்பில் இருக்கும்போது, ​​இந்தத் […]

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் தான் நடத்திய சந்திப்புகளில் இதுவே மிகச்சிறந்த சந்திப்பாகும் என்று இஸ்ரேல் பிரதமர் Netanyahu தெரிவித்தார். உலகம் செய்தி

இதுவே மிகச்சிறந்த சந்திப்பு: ட்ரம்பை கண்ட பின் நெதன்யாகு நெகிழ்ச்சி

  • July 29, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் தான் நடத்திய சந்திப்புகளில் இதுவே மிகச்சிறந்த சந்திப்பாகும் என்று இஸ்ரேல் பிரதமர் Netanyahu தெரிவித்தார். ட்ரம்புடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்கா – இஸ்ரேல் உறவில் விரிசல் இருப்பதாக வெளியாகும் தகவல்களையும் நெதன்யாகு நிராகரித்துள்ளார். ஈரானின் அணுஆயுதத் திறன் குறித்து இரு நாடுகளும் ஒரே மாதிரியான கவனத்தைக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், “ஈரானில் உள்ள தீவிரவாத ஆட்சி அணுஆயுதங்களைப் பெற்று, ஒவ்வொரு அமெரிக்கருக்கும் அச்சுறுத்தலாக மாறுவதையோ, […]

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்துள்ள கைது உத்தரவை அமெரிக்க அதிகாரிகள் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, வாஷிங்டன் DC யில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். உலகம் செய்தி

இஸ்ரேல் பிரதமரை கைது செய்: வாஷிங்டனில் போராட்டம்

  • July 29, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்துள்ள கைது உத்தரவை அமெரிக்க அதிகாரிகள் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, வாஷிங்டன் DC யில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். கனமழை மற்றும் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும், போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையை நோக்கிப் பேரணியாகச் சென்றுள்ளனர். அத்துடன், , ஜார்ஜ்டவுனில் உள்ள போர் சீசன்ஸ் (Four Seasons) ஹோட்டலின் வரவேற்பறைக்குள் (lobby) சில போராட்டக்காரர்கள் அதிரடியாகப் […]

“செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இன்னும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையே இடம்பெற்றுவருகின்றது. குற்றவாளிகள் பற்றிய தகவல் இல்லை. அதை நோக்கிய விசாரணை இன்னும் ஆரம்பமாகவில்லை.” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழி: குற்றவாளிகளை கண்டறிய விசாரணை

  • July 29, 2026
  • 0 Comments

“செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இன்னும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையே இடம்பெற்றுவருகின்றது. குற்றவாளிகள் பற்றிய தகவல் இல்லை. அதை நோக்கிய விசாரணை இன்னும் ஆரம்பமாகவில்லை.” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, செம்மணி புதைகுழி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: “செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய […]

FIFA-வை வணிகமயமாக்க முயற்சியா? ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு ஐரோப்பா செய்தி விளையாட்டு

FIFA-வை வணிகமயமாக்க முயற்சியா? ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

  • July 29, 2026
  • 0 Comments

உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்காக, குஷ்னர் (Kushner) குடும்பத்தினர் உட்படத் தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து 2,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்குவதற்கான FIFA தலைவர் ஜியான்னி இன் பாண்டினோவின் (Gianni Infantino) திட்டத்திற்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான UEFA கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “இது விற்பனை செய்வதற்கு FIFA வின் சொத்து அல்ல. நம்மில் எவரும் கால்பந்தின் உரிமையாளர்கள் கிடையாது,” என்று UEFA வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகக்கோப்பை மற்றும் ‘கிளப் உலகக்கோப்பை’ […]

ஜப்பானின் தெற்கு நகரமான குமாமோட்டோவுக்கு அருகே ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஜப்பான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 13 ஆக உயர்வு

  • July 29, 2026
  • 0 Comments

ஜப்பானின் தெற்கு நகரமான குமாமோட்டோவுக்கு அருகே ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகப் பிரதமர் சனாய் தாகாய்ச்சி (Sanae Takaichi) தெரிவித்தார். “இப்போதும் கூடப் பலர் மீட்புக்காகக் காத்திருக்கிறார்கள், இது நேரத்துடன் போட்டியிடும் ஒரு போராட்டம். முடிந்தவரை அதிகமான மக்களைக் காப்பாற்றவும் மீட்கவும் களத்தில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்துவோம்,” என்று டோக்கியோவில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய […]

இத்தாலி தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுநராக (Head Coach) ரொபர்ட்டோ மான்சினி (Roberto Mancini) இரண்டாவது முறையாக பொறுப்பேற்கவுள்ளதாக இத்தாலிய கால்பந்து சம்மேளனத்தின் (FIGC) தலைவர் ஜியோவானி மலாகோ (Giovanni Malago) தெரிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

இத்தாலி அணியின் புதிய பயிற்றுநராக Roberto Mancini மீண்டும் நியமனம்

  • July 28, 2026
  • 0 Comments

இத்தாலி தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுநராக (Head Coach) ரொபர்ட்டோ மான்சினி (Roberto Mancini) இரண்டாவது முறையாக பொறுப்பேற்கவுள்ளதாக இத்தாலிய கால்பந்து சம்மேளனத்தின் (FIGC) தலைவர் ஜியோவானி மலாகோ (Giovanni Malago) தெரிவித்துள்ளார். அதேவேளை, அணியின் தொழில்நுட்ப இயக்குனராக (Technical Director) கிளாடியோ ரானியேரி (Claudio Ranieri) பொறுப்பேற்கவுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் பொஸ்னியா – ஹெர்ஸகோவினாவுக்கு (Bosnia and Herzegovina) எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் இத்தாலி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஜென்னாரோ […]

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 5 மெய்டன் ஓவர்களில் (Maiden Overs) விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜஸ்டின் க்ரீவ்ஸ் (Justin Greaves) படைத்துள்ளார். செய்தி விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை

  • July 28, 2026
  • 0 Comments

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 5 மெய்டன் ஓவர்களில் (Maiden Overs) விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜஸ்டின் க்ரீவ்ஸ் (Justin Greaves) படைத்துள்ளார். 32 வயதான அவர், போட்டியின் மூன்றாம் நாளில் 27 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் (5-27). இவரது இந்த அபார பந்துவீச்சு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணியின் […]

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுவாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

இலங்கை எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார் சீனத் தூதுவர்

  • July 28, 2026
  • 0 Comments

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுவாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து, எதிர்வரும் 31-ஆம் திகதி நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இச்சந்திப்பில், தூதுவர் கீ சென்ஹொங் தமது பதவிக் காலத்தில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர […]