இதுவே மிகச்சிறந்த சந்திப்பு: ட்ரம்பை கண்ட பின் நெதன்யாகு நெகிழ்ச்சி
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் தான் நடத்திய சந்திப்புகளில் இதுவே மிகச்சிறந்த சந்திப்பாகும் என்று இஸ்ரேல் பிரதமர் Netanyahu தெரிவித்தார்.
ட்ரம்புடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்கா – இஸ்ரேல் உறவில் விரிசல் இருப்பதாக வெளியாகும் தகவல்களையும் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
ஈரானின் அணுஆயுதத் திறன் குறித்து இரு நாடுகளும் ஒரே மாதிரியான கவனத்தைக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர்,
“ஈரானில் உள்ள தீவிரவாத ஆட்சி அணுஆயுதங்களைப் பெற்று, ஒவ்வொரு அமெரிக்கருக்கும் அச்சுறுத்தலாக மாறுவதையோ, உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறுவதையோ மற்றும் இஸ்ரேலின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக மாறுவதையோ நாங்கள் விரும்பவில்லை” என்று கூறினார்.
அத்துடன், “ராஜதந்திர வழிகளிலோ அல்லது வேறு வழிகளிலோ” அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த பொதுவான இலக்கு எட்டப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
டிரம்ப் பதவிப் ஏற்றதில் இருந்து நெதன்யாகு இதுவரை எட்டு முறை வெள்ளை மாளிகைக்கு வருகை தந்துள்ளார். வேறு எந்த ஒரு வெளிநாட்டுத் தலைவரும் இத்தனை முறை வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




