இலங்கை செய்தி

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் இலங்கை விஜயம்

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸி ஹௌலஹான் தலைமையிலான காங்கிரஸ் தூதுக்குழு, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸி ஹௌலஹான் தலைமையிலான காங்கிரஸ் தூதுக்குழு, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

இலங்கையுடனான அமெரிக்காவின் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பகிரப்பட்ட முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்லவும், இந்தக் குழு இலங்கை வந்துள்ளது.

அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரியான ஹௌலஹான், காங்கிரஸ் ஆயுத சேவைகள் குழுவின் உறுப்பினராகவும், இராணுவப் பணியாளர்கள் மீதான துணைக்குழுவின் தரவரிசை உறுப்பினராகவும், அவையின் புலனாய்வுக்கான நிரந்தரத் தெரிவுக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

கொழும்பில் இருக்கும்போது, ​​இந்தத் தூதுக்குழு, பல்வேறு இருதரப்புப் பிரச்சினைகள் குறித்து கலந்துரைாடுவதற்காக, சிறிங்கா அரசாங்க, இராணுவ மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் உயர்மட்ட சந்திப்புகளை நடத்தும்.

பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் இவர்களின் சந்திப்பு பட்டியலில் உள்ளனர்.

இந்தப் பயணம், இலங்கையுடனான வலுவான இருதரப்பு உறவுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

இது, நாடுகடந்த குற்றங்களைத் தடுப்பது, வர்த்தக உறவுகளையும் பொருளாதார அபிவிருத்தியையும் ஆழப்படுத்துவது, பிராந்திய உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது போன்ற பகிரப்பட்ட முன்னுரிமைகளை முன்னிறுத்துகிறது என அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

ஜுலை 27 ஆம் திகதி வந்த இந்தி குழு 30 ஆம் திகதிவரை நாட்டில் சந்திப்புகளை நடத்தும்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை