ஐரோப்பா

22வது திருத்தம் – நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.

இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ஷேவுடன் Marc-André Franche  இன்று (06) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.

முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்த எதிர்க்கட்சியின் நிலைப்பாடு ஜனநாயகக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், அது கட்சி அரசியல் அல்லது தனிப்பட்ட நலன்களால் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக 22வது திருத்தத்தை நாங்கள் நீதித்துறை சுதந்திரத்திற்கு ஓர் அச்சுறுத்தலாகக் கருதுகிறோம்,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு சுதந்திரமான நீதித்துறையை உறுதி செய்வதற்கு சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளதுடன், நாங்கள் மிகவும் ஜனநாயக ரீதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். ஜனநாயகம் சாத்தியமான அனைத்து வழிகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றும் கூறினார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்