இலங்கை

ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மீள ஆரம்பம்

ரஷ்யாவின் அஸூர் ஏர் நிறுவனம், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது.

நவம்பர் மாதம் முதல் விமான சேவைகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அஸூர் ஏர் அறிவித்துள்ளது.

அதன்படி, ரஷ்யாவில் உள்ள 5 விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கு தனது விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அஸூர் ஏர் நிறுவனத்துடன், ஏரோஃப்ளோட் மற்றும் எஸ்-7 ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்க உள்ளன.

இதற்கிடையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் ஏர்வேஸ் அடுத்த மாதம் முதல் இலங்கைக்கும் இங்கிலாந்திற்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்க உள்ளது.

மேலும், பிரிட்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் அக்டோபர் 23 முதல் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்