இத்தாலி அணியின் புதிய பயிற்றுநராக Roberto Mancini மீண்டும் நியமனம்
இத்தாலி தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுநராக (Head Coach) ரொபர்ட்டோ மான்சினி (Roberto Mancini) இரண்டாவது முறையாக பொறுப்பேற்கவுள்ளதாக இத்தாலிய கால்பந்து சம்மேளனத்தின் (FIGC) தலைவர் ஜியோவானி மலாகோ (Giovanni Malago) தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அணியின் தொழில்நுட்ப இயக்குனராக (Technical Director) கிளாடியோ ரானியேரி (Claudio Ranieri) பொறுப்பேற்கவுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பொஸ்னியா – ஹெர்ஸகோவினாவுக்கு (Bosnia and Herzegovina) எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் இத்தாலி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஜென்னாரோ கட்டூசோ (Gennaro Gattuso) தனது பதவியை விட்டு விலகினார்.
இதன் மூலம் நான்கு முறை உலகக் கோப்பையை வென்ற இத்தாலி அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. இதையடுத்து வெற்றிடமான பயிற்றுநர் இடத்திற்கே மான்சினி தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டாட்சி கவுன்சில் கூட்டத்தின் (Federal Council meeting) போது மலாகோ இந்த நியமனத்தை அறிவித்தார்.
61 வயதான மான்சினி, 2021-ஆம் ஆண்டு இத்தாலி அணி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (Euro 2021) பட்டத்தை வெல்வதற்குக் காரணமாக இருந்தவர் ஆவார்.




