உலகம்

ஹார்மூஸ் ஜலசந்தியில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் – ஈரான் எச்சரிக்கை

ஈரானின் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில்  ஹோர்முஸ் ஜலசந்திக்குள் நுழைய முயன்ற அமெரிக்க கடற்படை ஆளில்லா விமானத்தை தங்கள் படைகள் குறிவைத்ததாக ஈரான் இன்று அறிவித்தது.

இது தொடர்பில் ஈரான் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீர்வழிக்குள் நுழையவிருந்த   “ஆளில்லா மேற்பரப்புக் கப்பல்” மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது.

ஆக்கிரமிப்பாளரான அமெரிக்கா, இப்பகுதியை விட்டு வெளியேறி தனது தீய செயல்களை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்கள் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடைய மூன்று கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக IRGC கூறியதைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.

மேலும் ஹார்மூஸ் ஜலசந்தி,  அங்கீகரிக்கப்படாத பாதைகள் வழியாகச் செல்ல முயற்சிப்பதற்கு எதிராக கப்பல்களையும்  அந்தப் படை எச்சரித்துள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்