ஐரோப்பா செய்தி விளையாட்டு

FIFA-வை வணிகமயமாக்க முயற்சியா? ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

FIFA-வை வணிகமயமாக்க முயற்சியா? ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்காக, குஷ்னர் (Kushner) குடும்பத்தினர் உட்படத் தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து 2,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்குவதற்கான FIFA தலைவர் ஜியான்னி இன் பாண்டினோவின் (Gianni Infantino) திட்டத்திற்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான UEFA கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“இது விற்பனை செய்வதற்கு FIFA வின் சொத்து அல்ல. நம்மில் எவரும் கால்பந்தின் உரிமையாளர்கள் கிடையாது,” என்று UEFA வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகக்கோப்பை மற்றும் ‘கிளப் உலகக்கோப்பை’ போன்ற உலகளாவிய போட்டிகளை நடத்துவதற்காக FIFA Forward Enterprise – FFE என்ற வர்த்தகத் துணை நிறுவனத்தை உருவாக்க இன்பாண்டினோ திட்டமிட்டுள்ளதாக ‘தி டைம்ஸ்’ நாளிதழ் முதலில் செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்த FIFA, சிறுபான்மை மற்றும் கட்டுப்பாட்டு உரிமையற்ற பங்குகளை வாங்கும் நீண்டகால முதலீட்டாளர்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து, “ஆரம்பக் கட்டப் பங்கு மதிப்பீடான 2,000 கோடி அமெரிக்க டாலரின் அடிப்படையில்” இந்த ஆண்டின் பிற்பகுதியில் 420 கோடி அமெரிக்க டாலர் வரை திரட்டி, வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்த FFE திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்திற்காக FIFA நிறுவனம் ‘ஜே.பி மோர்கன்’ (JP Morgan) வங்கியுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகனான ஜாரெட் குஷ்னரின் சகோதரர் ஜோஷுவா குஷ்னர் தொடங்கிய ‘த்ரைவ் எடர்னல்’ (Thrive Eternal) நிறுவனமும் இதில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள அமைப்புகளில் ஒன்றாகும்.

சமீபத்தில் முடிந்த ஆண்களுக்கான உலகக்கோப்பைத் தொடர், டிரம்ப் மற்றும் இன்பாண்டினோ இடையேயான அரசியல் மற்றும் தனிப்பட்ட உறவை மேலும் வலுப்படுத்தியதுடன், UEFA உள்ளிட்ட அமைப்புகளுக்கு இதுகுறித்த கவலைகளையும் அதிகரித்துள்ளது.

FIFA போட்டிகளின் பங்குகளை விற்பனை செய்வது குறித்த செய்திகளுக்குப் பதிலளித்த UEFA , “கால்பந்தின் ஆன்மாவும் நிர்வாகமும் வியாபாரம் செய்வதற்கான சொத்துக்கள் அல்ல — குறிப்பாக இதன் மூலம் யாருக்கு நிதி லாபம் கிடைக்கிறது என்பதில் எந்தவொரு வெளிப்படைத்தன்மையும் இல்லாத சூழலில் இது முற்றிலும் தவறானது” என்று கூறியுள்ளது.

FIFA என்பது சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும், உலகம் முழுவதிலும் உள்ள 211 தேசிய உறுப்பினர் கூட்டமைப்புகளைக் கொண்ட ஒரு இலாபநோக்கற்ற அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி