ஐரோப்பா

பிரான்ஸ் பாடசாலையொன்றில் கத்திகுத்து தாக்குதல் – வழக்கு விசாரணை TCCக்கு மாற்றம்

பிரான்ஸின் மார்சேய் அருகே உள்ள பாடசாலையொன்றில் நேற்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதில் அப்பாடசாலையின் ஆசிரியர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை பிரான்சின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அரசு வழக்கறிஞர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்தேகநபர் ‘True Crime Community’ (TCC) எனப்படும் குழுவைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மார்சேய் அரசு வழக்கறிஞர் அலுவலகம் இந்த வழக்கின் அதிகார வரம்பை விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளதாக, பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அரசு வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்துள்ளது.

“அந்தச் சிறுவனின் மின்னணு சாதனங்களை ஆய்வு செய்தது உள்ளிட்ட ஆரம்பகட்ட விசாரணைகள், அவன் ‘True Crime Community’ (TCC) இயக்கத்துடன் தொடர்புடையவனாக இருக்கக்கூடும் என்பதையும், அவனது பள்ளியில் நடந்த குற்றச் செயல் இந்த சித்தாந்தத்தால் தூண்டப்பட்டிருக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன,” என்று அரசு வழக்கறிஞர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்