ஐரோப்பா

ஃபாக்லாண்ட் பிரித்தானியா முன்னெடுக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறுத்த ஆர்ஜன்டீனா முயற்சி

ஃபாக்லாண்ட் தீவுகளுக்கு அருகில் பிரித்தானியாவால் அங்கீகரிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் (எரிபொருள்) தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி ஆர்ஜன்டீனா அரசாங்கம் சர்வதேச கடல் தீர்ப்பாயத்தை நாடியுள்ளதாக அறிவித்துள்ளது.

“அர்ஜென்டினாவின்  இறையாண்மை உரிமைகளைப் பாதுகாப்பதையும், ஐக்கிய இராச்சியத்தால் ஒருதலைப்பட்சமாகவும் சட்டவிரோதமாகவும் அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தடுப்பதையும்” இந்தக் கோரிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் பிரித்தானிய  நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றத் துணைச் செயலாளர் உமா குமரன், “ஃபாக்லாண்ட் தீவுகளில் மேற்கொள்ளப்படும் நியாயமான வணிக நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை என்றும்  அவற்றில் ஈடுபடுபவர்களுக்குப் பிரித்தானிய  அரசு உறுதுணையாக நிற்கும்” என்றும்  கூறினார்.

தீர்ப்பாயத்தின் நடைமுறைகளில் ஐக்கிய இராச்சியம் பங்கேற்கும் என்றும், ஆனால் அந்த நடவடிக்கைகள் குறித்த தொடர்ச்சியான கருத்துகளையோ விளக்கங்களையோ வெளியிடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்