13வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை
மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் 12 ஆண்டுகால சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சிறுமியின் சித்தப்பா உறவுமுறையுடைய நபர் ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தது.
விசாரணையில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதுடன், தீர்ப்பும் அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





