இலங்கை

மட்டக்களப்பில் சோகம் – கோவில் திருவிழாவில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு

  • September 12, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்ற வருடாந்த திருவிழாவின்போது, ​​வெடிபொருள் ஒன்று வெடித்ததில் 13 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். உயிரிழந்தவர் கிரான், குளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என ‘அடையாளம் காணப்பட்டள்ளார். நேற்று (11) இரவு கோவில் வளாகத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்களின்போது, ​​இரவு 11.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. கொளுத்தப்பட்ட பட்டாசு ஒன்று வெடிக்காததால் அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டிருந்தது. இருப்பினும், அந்தச் சிறுவன் அதனைப் பார்வையிடுவதற்காக அருகில் சென்றபோது அது திடீரென வெடித்ததாக ‘தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் […]

இலங்கை

மட்டக்களப்பு – கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் கோர விபத்து – இருவர் பலி

  • August 23, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு – கோட்டைக்கல்லார் பிரதான சாலையில், கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார். நேற்று இரவு சுமார் 9:21 மணியளவில், சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டது. மோதலைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள்களில் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையை கடக்க தயாராக இருந்த 03 மாணவர்கள் மீது மோதியுள்ளது. இதில்  18 […]

இலங்கை

மூதுரில் சோகம் – பிரான்ஸ் செல்ல இருந்த இளைஞர் விபத்தில் சிக்கி மரணம்

  • August 3, 2026
  • 0 Comments

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் – ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் இன்று நேற்று மாலை (02) இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மூதூர் – கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (வயது21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் (வயது ) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் ஒருவர் […]

இலங்கை

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தாங்க முடியாத வெப்பம்

  • July 9, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெப்பமான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி,  இன்று (09) மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்  சில இடங்களில்,  வெப்பநிலையானது  மனித உடல் உணரும் வெப்பநிலையின் அளவை விட உச்சம் தொட வாய்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே வெயிலில் நீண்ட நேரம் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து செயல்படுவது வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, […]

இலங்கை

பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த நபர் உயிரிழப்பு – மட்டக்களப்பில் சம்பவம்!

  • May 24, 2026
  • 0 Comments

மட்டக்களப்பில் பொலிஸாரின் தடுப்புக்காவலில் இருந்த நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கரடியனாறு, கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பையா வசந்தகுமார் என அடையளாம் காணப்பட்டுள்ளார். மதுபோதைக்கு அடிமையான குறித்த நபர் வீட்டில் அடிக்கடி தகறாரில் ஈடுபடுவதாக தெரியவருகிறது. இதனைத் தொடர்ந்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். மேற்படி முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் அவரை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருந்துள்ளனர். இதன்போது அவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த […]

இலங்கை

மீனவரின் வலையில் சிக்கிய மனித உடல் – மட்டக்களப்பில் பரபரப்பு!

  • May 17, 2026
  • 0 Comments

மட்டக்களப்பில் கல்லடி பாலத்தில் மீன்பிடிக்கச்சென்ற மீனவரின் வலையில் மனித உடல் ஒன்று சிக்கியது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த மீனவர் இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் குறித்த சடலத்தை இனங்கண்டுள்ளார். இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் கல்லடி புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்திரசேகரன் கஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சம்பவ தினத்தன்று மதுபானம் அருந்திய நிலையில் […]

இலங்கை

16 வயது சிறுமி கடத்தல் : மட்டக்களப்பில் பரபரப்பு!

  • May 15, 2026
  • 0 Comments

மட்டக்களப்பில் 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்த முற்பட்ட சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. தமது தந்தையுடன் மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வகுப்பு ஒன்றுக்காக சென்ற சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். குறித்த தனியார் வகுப்பு நேற்று இடம்பெறாததன் காரணமாக தந்தை மட்டக்களப்பு நகரில் உள்ள தமது உறவினர் வீடொன்றுக்கு அருகில் சிறுமியை விட்டு  சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் குறித்த சிறுமி அந்த உறவினர் வீட்டை சென்றடையவில்லை என, அவருடைய தந்தைக்கு தகவல் […]

இலங்கை

காத்தான்குடியில் கரையொதுங்கிய மர்ம பொருள்!

  • March 14, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு – காத்தான்குடி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மர்மப் பொருள் நேற்று (13) மாலை கரையொதுங்கியுள்ளது. சுமார் 25 அடி நீளமும், 4 ஆடி உயரமும் கொண்ட இந்த மர்மப்பொருள் , கப்பல் தரைதட்டும்போது அதன் பாதுகாப்பிற்கு பயன்படும் தடுப்பு ஆணையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதேவேளை, குறித்த மர்மப்பொருள் தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.