ஐரோப்பா

போதைமருந்து கொடுத்து ஒரு தசாப்தமாக பாலியல் துஷ்பிரயோகம் – 04 பிரித்தானியர்களிடம் விசாரணை

  • October 27, 2026
  • 0 Comments

போதைப் மருந்து கொடுக்கப்பட்டு பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பிரித்தானிய பிரஜைகளிடமும் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 50 வயதான பிலிப் யங் என்பவர் தனது  மனைவியை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருடன் மேலும் மூன்று ஆண்களும் சேர்ந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பிலிப் யங் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று […]

உலகம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு

  • October 13, 2026
  • 0 Comments

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 364 முறைப்பாடுகள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) தெரிவித்துள்ளது. அதே காலப்பகுதியில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 114 முறைப்பாடுகளும் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்கள் தொடர்பான ஏனைய பிரச்சினைகள் குறித்து மொத்தம் 9,613 முறைப்பாடுகள்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைத்துள்ளன.  இதில் அதிகபட்சமாக செப்டம்பர் மாதத்தில் 1,554 […]

இலங்கை

13வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை

  • September 23, 2026
  • 0 Comments

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு மட்டக்களப்பு  மேல் நீதிமன்றம் 12 ஆண்டுகால சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. சிறுமியின்  சித்தப்பா உறவுமுறையுடைய நபர் ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு  மே 19ஆம் திகதி  பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தது. விசாரணையில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதுடன், தீர்ப்பும் அறிவிக்கப்பட்டது. இதற்கமைய குற்றவாளிக்கு […]

ஐரோப்பா

இளம் பெண் பாலியல் துஷ்பிரயோகம் – நாட்டிங்ஹாம் நகர மையம் சுற்றிவளைப்பு!

  • June 13, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் (Nottingham) நகர மையத்தில் இளம் பெண்ணொருவர் இன்று அதிகாலை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளதுடன், லேஸ் மார்க்கெட் சதுக்கத்தை மூடியுள்ளனர். அத்துடன் ஆடம்ஸ் வாக் ( Adams Walk ) சாலையிலும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவரை ஒரு இளம் பெண் என்று மட்டுமே விவரிக்கும் காவல்துறை, அவருக்கு அதிகாரிகள் உதவி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் […]

ஐரோப்பா

இணையத்தில் பாலியல் துஷ்பிரயோகம் : புதிய சட்டங்களை கொண்டுவர ஸ்டாமர் முயற்சி!

  • June 8, 2026
  • 0 Comments

“இணையத்தில் குழந்தைகள் ஆபத்துக்கு உள்ளாக்கப்படும்போது அரசாங்கம் வேடிக்கை பார்க்காது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் கடுந் தொனியில் எச்சரித்துள்ளார். குழந்தைகள் ஆபாசப் படங்களை அனுப்புவதையோ அல்லது பெறுவதையோ தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு இல்லையென்றால்  சில மாதங்களுக்குள் புதிய சட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற லண்டன் டெக் வீக் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ரயில்களில் பயணிப்போர் எதிர்கொள்ளும் பாரிய சவால்!

  • October 15, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில்களில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்  அதிகரித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்து (England), ஸ்காட்லாந்து (Scotland) மற்றும் வேல்ஸ் (Wales ) ஆகிய பகுதிகளில் 2,661 துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் 13 வயதுக்கும் குறைவான பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவின் போக்குவரத்து காவல்துறை இந்த அதிகரிப்பு கவலையளிப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் […]