ஐரோப்பா

நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்பு சூத்திரதாரிக்கு ஆதரவாக ஜெர்மனியில் மக்கள் போராட்டம்

பால்டிக் கடலில் 2022-ஆம் ஆண்டு நடந்த நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை இன்று ஹம்பர்க்கில் உள்ள நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் உக்ரேனிய பிரஜைக்கு ஆதரவாக பெருமளவான மக்கள் நீதிமன்றத்திற்கு வெளியே ஒன்றுக்கூடி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

உக்ரேனியக் கொடிகளை அசைத்த ஆதரவாளர்கள் “ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு” என்று அறிவிக்கும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

அதேநேர் எரிவாயுக் குழாயைச் சேதப்படுத்துவதற்கும், கட்டிடங்கள் மீது குண்டு வீசுவதற்கும் அல்லது பொதுமக்களைக் கொல்வதற்கும் உள்ள வேறுபாட்டை பதாகை ஒன்று சுட்டிக்காட்டியது.

இதேவேளை ஜெர்மானிய அரசு வழக்கறிஞர்களால் செர்ஹி கே. என அடையாளம் காணப்பட்ட பிரதிவாதி கடந்த 2022 ஆம் ஆண்டு நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 குழாய்களைச் சேதப்படுத்த உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அவர், மூழ்காளர்கள், ஒரு படகு கேப்டன் மற்றும் ஒரு வெடிபொருள் நிபுணர் அடங்கிய குழுவை வழிநடத்தியதாக அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வெடிப்புகள் தொடர்பான குற்றங்கள், சொத்து சேதம், பொதுச் சேவைகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பை உள்ளடக்கியதாகக் கூறப்படும் ஒரு போர்க்குற்றம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார்.

இருப்பினும் அவர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்