உலகம்

22 ஆவது திருத்தத்திற்கு எதிராக போராட்டத்திற்கு ஏற்பாடு – சஜித் அழைப்பு

  • September 13, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22-வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாரிய போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வரு் 24 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள்  கட்சியின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைச் சிதைப்பதன் மூலம், முன்மொழியப்பட்ட 22-வது […]

ஐரோப்பா

ஜேர்மனியில் AfD கட்சிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் – பொலிஸார் குவிப்பு

  • July 4, 2026
  • 0 Comments

ஜேர்மனியின் தீவிர வலதுசாரி AfD கட்சியின் மாநாடு இன்று இடம்பெற்ற நிலையில் அக் கட்சிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.  சுமார் 15000 பேர் இதில் கலந்துகொண்டிருக்கலாம் என காவல்துறை மதிப்பிட்டுள்ளது. அவர்கள் அக்கட்சியின் மாநாட்டிற்கு செல்லும் முக்கிய சாலைகளையும் இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஜேர்மனி முழுவதும் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலவரத் தடுப்பு பொலிஸார்  குவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிராந்தியத் தேர்தல்களில் […]

ஐரோப்பா

தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக போராட்டம் – UK பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

  • June 12, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில்  பாலஸ்தீன அமைப்புக்கு  ஆதரவாக குரல் எழுப்பிய 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த குழுவினர் வூல்விச் கிரவுன் நீதிமன்றத்திற்கு வெளியே ஒன்றுக்கூடி போராட்டத்தில் ஈடுபட்டபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலைத் தளமாகக் கொண்ட பிரித்தானியாவில் இயங்கிவரும் தொழிற்சாலையொன்றில் கடந்த 2024 ஆம் ஆண்டில்  நடத்தப்பட்ட தாக்குதலுக்காக நான்கு ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு  இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாகவே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.      

உலகம்

கென்யாவில் மக்கள் போராட்டம் : இருவர் மீது துப்பாக்கிச்சூடு!

  • June 2, 2026
  • 0 Comments

கென்யாவில் எபோலா தனிமைப்படுதல் கூடாரங்களை அமைக்க அமெரிக்கா தயாராகி வருகின்ற நிலையில் இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய கென்யாவின் நன்யூகி (Nanyuki) நகரில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இறந்தவர்களில் ஒருவர், “தனது வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது” சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த துப்பாக்கிச்சூடு தொடர்பில் அதிகாரிகள் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. இதேவேளை நேற்றைய தினம் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரின் […]

உலகம்

கென்யாவில் போராட்டத்தில் நான்கு பேர் உயிரிழப்பு – போராட்டத்தை கைவிட தீர்மானம்!

  • May 19, 2026
  • 0 Comments

கென்யாவில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் கலந்தாலோசனை நடத்துவதற்காக ஏதுவாக தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி போராட்டத்தின்போது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  மேலும் சட்டவிரோதப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக 348 பேர் கைது செய்யப்பட்டனர். கென்யாவில் டீசல் விலை 23.5% அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை 8 சதவீதத்தால் உயர்ந்துள்ளது. விலை உயர்விற்கு ஈரான் போரே காரணம் என அதிகாரிகள் தெரிவத்துள்ளனர். ஆனால் அரசாங்கத்தின் […]

ஐரோப்பா செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு லண்டனில் பேரணி

  • May 19, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு லண்டன் நகரில் பேரணியும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இந்த பேரணி நேற்று பிற்பகல் பாராளுமன்ற சதுக்கம் பகுதியில் ஆரம்பமாகியதுடன் Downing Street இல் நிறைவடைந்தது. தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கொலை சம்பவத்தை உலக நாடுகளுக்கு மீண்டும் நினைவூட்டும் நோக்கில் இந்த பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. 2009 ஆம் ஆண்டில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் இடம்பெற்ற இந்த பேரணியில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து நீதிக்கான கோரிக்கைகளை முன்வைத்து […]

ஐரோப்பா

Make England Great Again : ஆர்ப்பாட்டத்தில் முழக்கம்!! 40இற்கும் மேற்பட்டோர் கைது!

  • May 17, 2026
  • 0 Comments

டாமி ராபின்சனின் ‘யுனைட் தி கிங்டம்’ பேரணி மற்றும் பாலஸ்தீன ஆதரவு நக்ஃபா தினப் பேரணி ஆகிய இரண்டு முக்கிய ஆர்ப்பாட்டங்களின் போது 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, சுமார் £4.5 மில்லியன் செலவில் 4000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கணிசமான காவல்துறைப் பாதுகாப்பும் இருந்தபோதிலும், பல்வேறு குற்றங்களுக்காக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் டாமி ராபின்சன் பேரணியில், ராபின்சன் […]

உலகம்

பொலிவிய ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : இராணுவத்தினர் குவிப்பு!

  • May 16, 2026
  • 0 Comments

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் புதிய ஜனாதிபதியான  ரொட்ரிகோ பாஸின்  (Rodrigo Paz) ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கிடையில் தலைநகர் லா பாஸில் ஒன்றுக்கூடிய சுரங்க தொழிலாளர்கள் பிரமாண்ட பேரணிகளை நடத்தியுள்ளனர். இதில் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் அங்கு காவலுக்கு நின்ற அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிஸார் […]

இந்தியா செய்தி

எரிவாயு விலை உயர்வு – மே 07 இல் தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம்

  • May 3, 2026
  • 0 Comments

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ரயில்வேயில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் குறைக்கப்படுவதை கண்டித்து,  எதிர்வரும் 07 ஆம் திகதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சிபிஐ (எம்.எல்) லிபரேசன் உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை கடந்த […]

இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் போராட்டம் முன்னெடுப்பு!

  • December 10, 2025
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடக்கு, கிழக்கில் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களை தாங்கியவாறு, நீதி கோரும் பதாதைகளுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கைதிகள் விடுதலை, பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் குரல் எழுப்பட்டது. அத்துடன், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் […]