உலகம்

ஈரான் ஒருபோதும் அணுவாயுதங்களை வைத்திருக்காது : இஸ்ரேல் – அமெரிக்கா உறுதிமொழி

  • July 28, 2026
  • 0 Comments

ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்காது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் உறுதிமொழிந்துள்ளனர். வொஷிங்டனில் நேற்று இருநாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொண்ட நிலையில் இந்த உறுதிமொழி எட்டப்பட்டுள்ளது. “இது மிகவும் நேர்மறையான சந்திப்பாக இருந்தது. பிரதமரும் அதிபரும் அன்றைய முக்கியப் பிரச்சினைகள், குறிப்பாக ஈரான் குறித்து, ஒரு சிறந்த மற்றும் விரிவான விவாதத்தை நடத்தினர்,” என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்காது […]

உலகம்

அணு ஆயுதத்தை உருவாக்குவதில் ஆர்வம் காட்டும் ஈரானின் புதிய தலைவர் – உளவுத்துறை

  • July 25, 2026
  • 0 Comments

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, தனது தந்தை மற்றும் முன்னோடியை விட அணு ஆயுதத்தை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது. அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுத்த ஆரம்பக் காலப்பகுதியில் கமெனியின் தந்தை, அணு ஆயுதத்தை உருவாக்குவதில்லை என்று சபதம் செய்திருந்தார். அணு ஆயுதத்தை உருவாக்கும் திறனைப் பெற ஈரான் விரும்புவதாக அமெரிக்க அதிகாரிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தாலும்,  அலி கமெனியின் தயக்கம் உண்மையானது என்று பலர் நம்பினர். […]

ஐரோப்பா

உக்ரைன் மீது அணுவாயுதத்தை பயன்படுத்த தயாராகும் ரஷ்யா : சீனா எச்சரிக்கை

  • July 10, 2026
  • 0 Comments

உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சீனா ஜனாதிபதி எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கூற்றை உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே அசோவ் கடலில் ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகளுக்கான எரிபொருள் விநியோகத்தைத் தடை செய்வதற்கும், மொஸ்கோ ஆக்கிரமித்துள்ள கிரிமியாவைத் தனிமைப்படுத்துவதற்குமான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதற்காக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வாரத்தின் முதல் நான்கு நாட்களில், […]

ஐரோப்பா

அணுவாயுதம் எப்போது பயன்படுத்தப்படும் : ரஷ்ய ஜனாதிபதி விளக்கம்!

  • May 22, 2026
  • 0 Comments

ரஷ்யா போரில் அணுவாயுதங்களை பயன்படுத்தும் என நீண்டகாலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கடைசி முயற்சியாகவே அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார். 64,000 துருப்புகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் அதிவேக ஏவுகணைகளை உள்ளடக்கிய, பல ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அணுசக்திப் பயிற்சியை ரஷ்யாவும், பெலாரஸும் நிறைவு செய்துள்ளன. நேட்டோவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இவ்விரு நாடுகளும் முன்னெடுத்துள்ள இந்த பயிற்சியை ஐரோப்பிய நாடுகள் கண்டித்துள்ளன. நேட்டோ மீதான எந்தவொரு தாக்குதலும் […]

ஐரோப்பா

ஜெலென்ஸ்கியின் எச்சரிக்கை : பெலாரஸுக்கு அணுவாயுதங்களை மாற்றும் ரஷ்யா!!

  • May 21, 2026
  • 0 Comments

ரஷ்யா தனது நட்பு நாடான பெலாரஸுடன் மூன்று நாள் கூட்டுப் பயிற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரஷ்யா அணு ஆயுதங்களை அங்குள்ள சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அணு ஆயுதத் திறன் கொண்ட ஏவுகணைகள் மற்றும் அவற்றின் இரகசிய நகர்வுகளை சோதிக்கும் நோக்கில் இந்த பயிற்சி முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் இந்தப் பயிற்சிகள், ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளிலும் நடைபெறும். கீவ் மீது ரஷ்யா ஒரு புதிய தரைவழித் தாக்குதலை […]

உலகம்

ஈரான் அணுவாயுதத்தை விரைவில் பயன்படுத்தும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான் இஸ்ரேல், மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக விரைவில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். புளோரிடாவில் நடந்த பேரணி ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஈரானை வழிநடத்த யாரும் விரும்பவில்லை என்றும், அமெரிக்க இராணுவம் அதன் தலைமைத்துவத்தின் பல அடுக்குகளை ஒழித்துவிட்டதால் பேச்சுவார்த்தைகள் கடினமாகிவிட்டன என்றும் அவர் கூறினார். அமெரிக்கா ஈரானை விட்டு வெளியேறக்கூடும், ஆனால் ஒரு முழுமையான […]