டெக்சாஸில் நெடுஞ்சாலையில் விழுந்த விமானம் : ஒருவர் உயிரிழப்பு
டெக்சாஸின் (Texas) லாரெடோவில் (Laredo) உள்ள லூப் (Loop) 20 நெடுஞ்சாலையில்,ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெட்ஜெட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான செஸ்னா சிடேஷன் லாட்டிட்யூட் (Cessna Citation Latitude) என்ற இரட்டை சிலிண்டர் ஜெட் ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானத்தில் 06 பேர் பயணித்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனையவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





