முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம், டாக்டர். ஜானகி ராமன் மற்றும் புரவலர் பால்பாண்டியன் ஆகிய 3 தமிழர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 3 பேருக்கும் அமெரிக்க வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான அறிவிப்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

டல்லாஸ் நகரில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டின் நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் மார்க் விசி 3 பேருக்கும் இந்த விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

அமெரிக்க விருதை பெற்ற 3 தமிழர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் வெளிநாடு வாழ் தமிழ்நாடு நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்