லெபனானிலும் உடனடி போர் நிறுத்தம் – பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்து
லெபனானில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க உடனடி மற்றும் முழுமையான போர்நிறுத்தம் அவசியம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron வலியுறுத்தியுள்ளார்.
ஜி7 உச்சி மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்ட புதிய ஒப்பந்தத்தை அவர் பாராட்டியதுடன், இது பிராந்தியத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு உதவும் என்றும் குறிப்பிட்டார்.
லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை தனது உரையில் பிரான்ஸ் ஜனாதிபதி இடித்துரைத்தார்.





