உலகம்

டெக்சாஸில் வெள்ளத்தில் சிக்கிய சிறுமி – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

  • July 18, 2026
  • 0 Comments

டெக்சாஸில்  கடுமையான வெள்ளத்தில் சிக்கிய சிறுமி ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வெள்ளத்தில் சிக்கி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட்டின் (Greg Abbott’) அலுவலகத்தால் பகிரப்பட்ட காணொளியில், அந்தச் சிறுமி மீட்கப்பட்டதும், அவரது குடும்பத்தினர் மற்றும் இரண்டு நாய்களும் மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றப்பட்டதும் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையே டெக்சாஸ் மலைப்பகுதி முழுவதும் பெய்த கனமழையால், ஆறுகள் பெருக்கெடுத்து   உயிருக்கு ஆபத்தானவையாக மாறியுள்ளன. மேற்படி வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கான சாலைகளை அடித்துச் […]

உலகம் முக்கிய செய்திகள்

டெக்சாஸில் நெடுஞ்சாலையில் விழுந்த விமானம் : ஒருவர் உயிரிழப்பு

  • June 17, 2026
  • 0 Comments

டெக்சாஸின் (Texas) லாரெடோவில் (Laredo) உள்ள லூப் (Loop) 20 நெடுஞ்சாலையில்,ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெட்ஜெட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான செஸ்னா சிடேஷன் லாட்டிட்யூட் (Cessna Citation Latitude) என்ற இரட்டை சிலிண்டர் ஜெட் ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானத்தில் 06 பேர் பயணித்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனையவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   […]

உலகம்

டெக்சாஸில் துப்பாக்கிச்சூடு -10 பேர் படுகாயம்!!

  • June 12, 2026
  • 0 Comments

டெக்சாஸின் மிட்லாண்ட் நகரில் இன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் பத்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் கட்டிடம் ஒன்றுக்குள் பதுங்கியிருந்த நிலையில் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார், பாதுகாப்பு வளையத்தை அமைத்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேநேரம் பொதுமக்கள் அந்த பகுதியை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

வட அமெரிக்கா

அமெரிக்காவில் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு – சிறுவர்கள் பலி!

  • October 5, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் இரு சிறுவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 04 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 34 வயதான கெரியன் ரஷாத் ஜோன்ஸ் என்பவர் சந்தேகத்தின்பேரில் கைது  செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்பட ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளதாக […]