உலகம்

இந்தியா மற்றும் நேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் மழை -19 பேர் உயிரிழப்பு

  • September 27, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் நேபாளத்தின் பல பகுதிகளில் கனமழை மற்றும் புயல் காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆற்று நீர்மட்டம் எச்சரிக்கை அளவைத் தாண்டியதால், 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் 10 பேரைக் காணவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில், கடந்த 48 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதுடன்,  117 வீடுகள் சேதமடைந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 63-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, அங்கு இயல்பை விட […]

உலகம்

நேபாளத்தில் 07 ஆயிரம் அடி உயரமான மலையில் பனிச்சரிவு – 10 பேர் மாயம்

  • September 27, 2026
  • 0 Comments

திபெத்திய எல்லைக்கு அருகில், மேற்கு நேபாளத்தில் உள்ள 7,126 மீட்டர் உயர ஹிம்லுங் ஹிமால் (Himlung Himal) மலைத்தொடரில்  இன்றுக் காலை பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கி  10 பேர் காணாமல்போயுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். காணாமல் போனவர்களில் பல்வேறு மலையேற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் சமையலறை ஊழியர்கள் இருவரும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் விடுக்கப்பட்ட வானிலை எச்சரிக்கைகள் காரணமாக பெரும்பாலான மலையேறுபவர்களும் குழுக்களும் மலைச்சரிவுகளில் இருந்து பாதுகாப்பாக இறங்கிவிட்ட போதிலும், ஒரேஒரு குழுவினர் […]

உலகம்

நேபாளத்தில் மின் உற்பத்தி திறன் சீர்குலைவு – கைக்கொடுக்கும் இந்தியா

  • September 20, 2026
  • 0 Comments

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம், அந்நாட்டின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தித் திறனை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்நிலையில் நிவாரணம் அளிக்கும் விதமாக, டிசம்பர் 31 வரை நேபாளத்திற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மின்சாரம் வழங்க இந்திய மின்சார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கமைய நேபாளத்திற்கு 654 மெகாவாட் வரை மின்சாரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு, டிசம்பர் மாதம் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. […]

உலகம்

நேபாளத்தில் நிவாரணப் பொருட்களை விநியோகிக்க பேருதவியாக அமையும் ட்ரோன்கள்

  • September 9, 2026
  • 0 Comments

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சேர்க்க நேபாள ராணுவம் ட்ரோன்களைப் (ஆளில்லா விமானங்களை) பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நேபாள ராணுவத்தின் ஒப்பந்த ட்ரோன் விமானி சந்தோஷ் புததோகி Santosh Budhathoki, “எங்களின் பெரும்பாலான ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. உணவு, அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் எரிபொருளை அனுப்ப […]

உலகம்

எமனுடன் போராட்டம் – நேபாளத்தில் 11 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி

  • September 6, 2026
  • 0 Comments

நேபாளத்தின் கொடிய வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி ஒருவர் 11  நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். குறித்த மூதாட்டி இறந்துவிட்டதாக நம்பிய அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கிற்காக தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த மீட்பு பணி இடம்பெற்றுள்ளது. பேரழிவிற்குள்ளான பெட்ராவதி கிராமத்தில் இடிந்து விழுந்த அவரது வீட்டிற்குள் இருந்து அவர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “நான்கு மாடிகளைக் கொண்ட குறித்த வீடு அடித்துச் செல்லப்பட்டு சகதிகளின் நடுவில் புதையுண்டிருந்தது. மீட்பு பணியாளர்கள் அவ்வழியே சென்றபொது என்னைக் காப்பாற்றுங்கள் என்ற குரல் ஒலித்ததாகவும், […]

உலகம்

நேபாளத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய மேலும் இருவர் மீட்பு

  • September 5, 2026
  • 0 Comments

நேபாளத்தில்  பேர் அனர்த்தில் சிக்கிய மேலும் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று இருவர் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் இருவர் மீட்கப்பட்டுள்ளனர். திரிசூலி ஆற்றங்கரை நீர்மின் சுரங்கப்பாதையிலிருந்துதான் இவ்விருவரும் மீட்கப்பட்டதாகவும் சீன இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

நேபாளத்திற்கு மற்றொரு சுற்று உதவி – காத்மாண்டு பறந்த இந்திய விமானங்கள்

  • September 4, 2026
  • 0 Comments

நேபாளத்திற்கு, மற்றொரு தொகுதி மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 21.5 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த இந்திய விமானப்படையின் 6 மற்றும் 7-வது சிறப்பு விமானங்கள் ஏற்கனவே காத்மாண்டு வந்தடைந்துள்ளன. இந்த சமீபத்திய தொகுதி நிவாரணப் பொருட்களில் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடயவியல் மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் அடங்கும் என்று கூறப்படுகிறது. தொடர்புடைய உதவித் தொகுதி, நேபாளத்தின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

சீன எல்லையில் நிலச்சரிவு முன்னெச்சரிக்கை அமைப்பை கட்டமைக்கும் நேபாளம்

  • September 3, 2026
  • 0 Comments

சீனாவுடனான தனது எல்லையில் நிலச்சரிவுகளுக்கான முன் எச்சரிக்கை அமைப்பை கட்டமைக்க நேபாளம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நில அதிர்வு உணர்விகள், கேமராக்கள் மற்றும் ஒரு செயற்கைக்கோள் இணைப்பு நிறுவப்படும் என நேபாள அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த உபகரணங்கள், நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே என்ற எல்லைக் குடியேற்றப் பகுதியில் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பகுதியிலேயே பனிப்பாறை சரிந்து விழுந்ததாகவும், இதன் விளைவாக 1,114 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4000 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

நேபாளத்தை போலவே ஐரோப்பாவிற்கும் ஆபத்து – நிபுணர்கள் எச்சரிக்கை

  • August 29, 2026
  • 0 Comments

காலநிலை மாற்றத்தால், ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையானது பனிப்பாறைகளை வெகுவாக உருக வைக்கும் எனவும், கடல் நீர்மட்டம் உயர்ந்து பாரிய அனர்த்தம் ஏற்படும் எனவும் ஆய்வாளர்கள் முன்னதாக எச்சரித்திருந்தனர். இதற்கிடையே அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, பனிப்பாறை உருகியதால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது ஆல்ப்ஸ் மலைகளுக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். துருவ மற்றும் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிரேமன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பனிப்பாறை […]

உலகம்

நேபாளத்தில் மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தம்

  • August 29, 2026
  • 0 Comments

எல்லைப் பகுதியைத் தாக்கிய திடீர் வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளை நேபாள மற்றும் சீன அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். வெள்ளத்தின் போது உருவானதாகக் கூறப்படும் ‘தடுப்பு ஏரி’ நிரம்பி வழிந்ததால், இந்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரி நிரம்பி வழியும் அபாயம் அதிகரித்துள்ளதால், மீட்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட சீன மீட்புக் குழுக்களும் வாகனங்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நேபாள அதிகாரிகளும் […]