உலகம்

நைஜீரியாவில் இராணுவத் தளம் மீது தீவிரவாத தாக்குதல் – 20 பேர் பலி

நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் உள்ள ராணுவத் தளம் ஒன்றின் மீது, போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தாக்குதல் சம்பவத்தில் இராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதுடன், அருகில் உள்ள கிராமம் ஒன்றுக்கும் தீவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ராணுவ செய்தித் தொடர்பாளர் கேப்டன் முகமது கோனி, இந்தத் தாக்குதல் குறித்த கருத்து கோரிய அழைப்புகளுக்கோ அல்லது செய்திகளுக்கோ பதிலளிக்கவில்லை என ரொய்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ராணுவத் தளத்தின் மீதான தாக்குதலுக்கு முன்னதாக, அந்தத் தீவிரவாதிகள் தும்புன் பாரேபாரி Tumbun Barebari  என்ற ஏரிக்கரை கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளைக் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்