உலகம்

நைஜீரியாவில் ஆயுதமுனையில் கடத்தப்பட்ட பெண்கள் – 12 பேர் கொலை

  • August 3, 2026
  • 0 Comments

நைஜீரியாவின் வடமேற்கு சொகோட்டோ (Sokoto) மாநிலத்தில் உள்ள கிராமத்தின்மீது ஆயுதம் ஏந்திய நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு குடும்பத்தின் வீட்டிற்குத் தீ வைத்ததில், அக்குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் லஜிங்கே கிராமத்திற்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் […]

உலகம்

நைஜீரியாவில் கிராமமொன்றை சுற்றிவளைத்த ஆயுததாரிகள் – 30 பேர் படுகொலை

  • July 27, 2026
  • 0 Comments

நைஜீரியாவின் கடூனா மாநிலத்தில் இன்று அதிகாலை ஆயுததாரிகள் கிராமமொன்றை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில், குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிராமத்திற்குள் புகுந்த ஆயுததாரிகள் அங்கிருந்த மக்களை கண்மூடித் தனமாக சுட்டும், தாக்கியும் கொலை செய்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 08 குழந்தைகளும் அடங்குவதாக கிராமத் தலைவரின் செயலாளர் டோகன் ராணா (Dogon Rana) கூறினார். நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் வட-மத்தியப் பகுதிகளில் ஆயுதக் கும்பல்கள் மற்றும் பிற குற்றக் குழுக்களின் வன்முறை ஒரு பெரிய பாதுகாப்புச் சவாலாக மாறியுள்ளது. […]

உலகம்

இராணுவத்தை விரிவாக்க நைஜீரிய ஜனாதிபதி ஒப்புதல்

  • July 24, 2026
  • 0 Comments

நைஜீரியாவில் இராணுவத்தை பலப்படுத்த அந்நாட்டு ஜனாதிபதி போலா தினுபு ( Bola Tinubu) நடவடிக்கை எடுத்துள்ளார். தொடர்ச்சியான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் இராணுவத்தை எட்டிலிருந்து 12 பிரிவுகளாக விரிவுபடுத்தவும், கூடுதலாக 28,000 வீரர்களைச் சேர்க்கவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கமைய மகுர்தி (Makurdi), இலாரின் (Ilorin), ஜலிங்கோ (Jalingo) மற்றும் பெனின் சிட்டி (Benin City) ஆகிய இடங்களில் நான்கு புதிய இராணுவப் பிரிவுகளை அமைக்க அவர் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தித் […]

உலகம்

நைஜீரியாவில் பரீட்சை எழுதிய மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்

  • June 29, 2026
  • 0 Comments

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள மேல்நிலை பாடசாலையொன்றில்  துப்பாக்கி ஏந்திய ஆயுததாரிகள் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவர்களை கடத்திச் சென்றதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினர் குறித்த குழுவினரை  பின்தொடர்ந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இராணுவ வீரர் ஒருவரும், துணை ராணுவ ஆதரவுப் படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து 10 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை இராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். அதேநேரம் இன்னும் சில மாணவர்கள் காணாமல்போயுள்ளதாகவும், எத்தனை பேர் காணாமல் […]

உலகம்

நைஜீரியாவில் (Nigeria) பெட்ரோல் ஏற்றிச் சென்ற லொறி விபத்து – 31 பேர் பலி!

  • October 22, 2025
  • 0 Comments

நைஜீரியாவில் (Nigeria) பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லொறி ஒன்று வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகியுள்ளது. நைஜர் (Niger) மாநிலத்தின் பிடா (Bida) பகுதியில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் லொறியில் இருந்து கசிந்த பெட்ரோலை சேகரிக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விபத்துக்கான காரணத்தை அறிய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக […]