Consent Preferences
உலகம்

இஸ்ரேலில் சுழற்சி முறையிலான ஆட்சி முறை – பிரதமராகிறார் காடி ஐசன்கோட்

இஸ்ரேலில் பொதுத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்கு போதுமான வெற்றி எந்த கட்சிக்கும் கிடைக்கப்பெறாத நிலையில், சுழற்சி முறையில் ஆட்சியமைக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் முதலில் பிரதமராகப் பதவியேற்பதை ஏற்றுக்கொள்வதாக பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இது தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட ஊடகப் பதிவு ஒன்றில், ஒரு தலைவராக எனது பொறுப்பு, மிகப்பெரிய கட்சி என்ற கொள்கை உட்பட அனைத்தையும் ஒதுக்கி வைக்க என்னை கடமைப்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளநெதன்யாகு, ஆரம்பத்தில் அவர் ஒரு “மாற்றுப் பிரதமராக” பணியாற்றுவார் என்றும் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கால் 28 நாட்களுக்குள் ஆட்சியமைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்த நிலையில், இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

மேலும் ஐசன்கோட்டின் மிதவாத யஷார் கட்சியும் மற்ற மூன்று யூத எதிர்க்கட்சிகளும் அக்டோபர் தேர்தலில் 48 இடங்களை வென்றன.

நெதன்யாகுவின் அணி 53 இடங்களை வென்றது. 120 இடங்களைக் கொண்ட நெசெட்டில் இரு அணிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்