Consent Preferences
உலகம்

கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – குடியிருப்புகளுக்கு சேதம்

அமெரிக்காவின் கலிபோர்னியா  California கடற்கரைக்கு அப்பால் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று பதிவாகியுள்ளது.

இவ் அனர்த்தத்தினால்  லொஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்தில் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகிலுள்ள மன்ஹாட்டன் பீச் நகருக்கு அருகே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து பல பின் அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.

பாதிப்புகள் தொடர்பான மதிப்பீடுகளை உள்ளுர் பணியாளர்கள் மேற்கொண்டு வருவதாக கலிபோர்னியா ஆளுநரின் அவசரகால சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் “நிலநடுக்கங்கள் கணிக்க முடியாதவை, எனவே பின் அதிர்வுகளுக்குத் தயாராக இருங்கள்,” என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விமானம் ஒன்றும் தரையிறங்குவதில் சிக்கலை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்