உலகம்

ஈரான் போரால் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக தகவல்!

  • August 10, 2026
  • 0 Comments

ஈரான் போர் தொடர்வதால் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கவலைகள் எழுந்துள்ள நிலையில், ஆயுத உற்பத்தியை அதிகரிக்குமாறு அமெரிக்க இராணுவ ஒப்பந்ததாரர்களை அமெரிக்க பாதுகாப்புத் துறை வலியுறுத்தியுள்ளது. பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் ஸ்டீவ் ஃபைன்பெர்க் (Steve Feinberg) எழுதியுள்ள குறிப்பாணை ஒன்றில்,  “முக்கியமான திறன்களுக்கான விநியோக அட்டவணைகளை  வேகமாகவும், தீவிரமாகவும் செயல்படுத்துவதற்கும்,   உற்பத்தியை அதிகரிப்பதற்கும்” திட்டங்களைச் சமர்ப்பிக்க,   துறையின் தலைவர்களுக்கு 21 நாட்களுக்கு மேல் அவகாசம் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தொழில் தளத்தை மீண்டும் […]

உலகம் முக்கிய செய்திகள்

ஈரான் போருக்கு முடிவுக்கட்ட களத்தில் இறங்கிய மத்திய கிழக்கு நாடுகள் – தயாராகும் ஒப்பந்தம்

  • August 2, 2026
  • 0 Comments

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஒன்றின் வரையறைகளை மத்தியக் கிழக்கு நாடுகள் எடுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இட்டுள்ள பதிவொன்றில், ஐந்து மாதங்களாக நீடித்து வரும் இந்த மோதலில் தற்போதைக்கு புதிய தாக்குதல்களுக்கு உத்தரவிடப் போவதில்லை என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் தனது ட்ரூத் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவொன்றில், உருவாகி வரும் இந்த ஒப்பந்தம் உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியை “உடனடியாக, […]

உலகம்

ஈரானின் ரேடார் தளங்கள் மீதான தாக்குதல் – விளக்கமளித்த அமெரிக்கா!

  • June 6, 2026
  • 0 Comments

ஈரானிய கடலோர கண்காணிப்பு ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் படங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய இராணுவ மோதல்கள், பலவீனமான போர் நிறுத்தத்தத்தையே வெளிப்படுத்துகின்றன. இது மத்திய கிழக்கை நிலைப்படுத்துவதற்கும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீர்வழிப்பாதை வழியூடான கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்குமான முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஹோர்முஸ் நீர்வழிப்பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நான்கு ஈரானிய ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாகவும், பின்னர் கோருக் மற்றும் கெஷ்ம் தீவில் உள்ள ஈரானிய கடலோர […]

உலகம்

4 ஆண்டுகளில் இல்லாத உச்சம்!

  • April 30, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான துறைமுக முற்றுகை பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என எச்சரித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஜூன் 2022க்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 120 டொலரைத் தாண்டியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருப்பது நீண்டகால மோதல்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

ஐரோப்பா

ஈரான் போர் முடிவடைந்தாலும் எரிசக்திக்கான விலை உயர்வு தொடரும்!!

  • April 26, 2026
  • 0 Comments

ஈரான் போர் முடிவடைந்த பின்னரும், எரிசக்தி, உணவு மற்றும் விமானப் பயணங்களுக்கான விலை உயர்வு குறைந்தது எட்டு மாதங்களுக்கு நீடிக்கும் என்று பிரித்தானிய அமைச்சரான டேரன் ஜோன்ஸ்,  (Darren Jones) எச்சரித்துள்ளார். இந்தப் பொருளாதாரத் தாக்கங்களுக்கு “மத்திய கிழக்கில் டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகளே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையே முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்படக்கூடிய பற்றாக்குறைகளைக் குறைப்பதற்கான தனது திட்டமிடலை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. பொருட்கள் இருப்பு நிலைகளைக் கண்காணிக்கவும், விநியோகச் […]

உலகம்

அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை

  • April 12, 2026
  • 0 Comments

இஸ்லாமாபாத்தில் பல மணிநேரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் இரு தரப்பினராலும் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியவில்லை என அமெரிக்கா துணை ஜனாதிபதி JD Vance தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர், முதன்முறையாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுஆயுதத் திறனைத் தடுப்பதே தமது பிரதான இலக்காகும் எனத் தெரிவித்த துணை ஜனாதிபதி, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து அமெரிக்கத் தூதுக்குழுவினர் பாகிஸ்தானிலிருந்து வெளியேறத் […]

உலகம்

உலகப் பொருளாதாரம் மந்தமடையும்: IMF எச்சரிக்கை

  • April 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சர்வதேச நிதி நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கணிப்பிற்கு முன்னதாக அவர் இந்தத் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மறித்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு இதுவரை இல்லாத […]

உலகம்

அமெரிக்காவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் !

  • April 3, 2026
  • 0 Comments

ஈரானின் வான்பரப்பிற்குள் பறந்த அமெரிக்காவின் இரண்டாவது F-35 ரக போர் விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் புரட்சிகர இராணுவம் (IGRC) தெரிவித்துள்ளது. குறித்த விமானம் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விமானம் வீழ்ந்து வெடித்த வேகத்தைப் பார்க்கும்போது, விமானி அதிலிருந்து வெளியேறியிருக்க வாய்ப்பில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலகம்

கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது அதிரடி தாக்குதல்

  • March 31, 2026
  • 0 Comments

டுபாய் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் குறித்த கப்பல் முழுமையாக எண்ணெயால் நிரப்பப்பட்டிருந்ததனால், கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

செய்தி

பஹ்ரைன் அலுமினிய ஆலை மீது ஈரான் தாக்குதல்

  • March 29, 2026
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பஹ்ரைனின் அலுமினிய உற்பத்தி தொழிற்சாலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் தொழிற்சாலையின் ஊழியர்கள் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் இரண்டு எஃகுத் (Steel) தொழிற்சாலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அலுமினியத் தொழிற்சாலைகளை இலக்கு வைத்ததாக ஈரானிய புரட்சிகர இராணுவம் தெரிவித்துள்ளது.