உலகம் முக்கிய செய்திகள்

தீவிரமடைந்து வரும் இசையாஸ் புயல் – பேரழிவுக்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கை

இசையாஸ் புயல், அட்லாண்டிக் பருவத்தின் முதல் சூறாவளியாகத் தீவிரமடைந்து, அமெரிக்க வளைகுடாக் கடற்கரையை நோக்கி முன்னேறி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பேரழிவை ஏற்படுத்தும் காற்று, புயல் அலைகள் மற்றும் கனமழை குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

புளோரிடா மற்றும் அலபாமா முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சில பகுதிகளில் கட்டாய வெளியேற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையே புயலுக்கு முன்னதாக, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்கள் வளைகுடாப் பகுதியில் தங்களின் கடல்சார் உற்பத்தியின் கணிசமான பகுதியை நிறுத்தியுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, அப்பகுதியில் சுமார் 25 சதவீத எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மிசிசிப்பியின் ஓஷன் ஸ்பிரிங்ஸ் முதல் புளோரிடாவின் கல்ஃப் கவுண்டி வரையிலான பகுதிகளுக்கு மின்வெட்டு தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,