Pratas தீவுகளில் சீனாவின் இருப்பு அதிகரிப்பு – ரோந்து நடவடிக்கையை தீவிரப்படுத்தும் தைவான்
Pratas தீவுகளைச் சுற்றி தைவான் தனது கடற்படை ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
சீனாவின் செயல்பாடுகள் அதிகரித்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த நடவடிக்கையை தைவான் முன்னெடுத்து வருகிறது.
இதற்கமைய அப்பகுதிக்கு பெரிய கப்பல்களைத் தொடர்ந்து அனுப்புவதும் இதில் அடங்கும் என தைவான் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தைவானைத் தனது சொந்தப் பிரதேசம் என சீனா உரிமை கோருகிறது, ஆனால் இந்த நிலைப்பாட்டை தைவான் அரசாங்கம் கடுமையாக மறுக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தைவானைச் சுற்றி சீனா தனது இராணுவ இருப்பை அதிகரித்து வருகிறது.
தெற்கு தைவானுக்கும் ஹாங்காங்கிற்கும் இடையில் அமைந்துள்ள, தைவானின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தீவுகள், தைவான் பெருநிலப்பரப்பிலிருந்து 400 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருப்பதால், சீனத் தாக்குதல்களுக்கு எளிதில் இலக்காகின்றன என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கூறியுள்ளனர்.




