இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல் செப்டம்பர் 20 வரையான காலப்பகுதிக்குள் 16 லட்சத்து 42 ஆயிரத்து 215 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 4 லட்சத்து 18 ஆயிரத்து 19 பேரும், பிரித்தானியாவில் இருந்து ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 895 பேரும் , சீனாவில் இருந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 237 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
ஜேர்மனியில் இருந்து 95 ஆயிரத்து 441 பேரும், ரஷ்யாவில் இருந்து 81 ஆயிரத்து 211 பேரும், பிரான்ஸில் இருந்து 77 ஆயிரத்து 630 பேரும் மேற்படி காலப்பகுதிக்குள் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து 83 ஆயிரத்து 431 பேரும், கனடாவில் இருந்து 33 ஆயிரத்து 361 பேரும் வருகை தந்துள்ளனர்.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பு வழங்கிவருகின்றது.
கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, செப்டம்பர் முதலாம் திகதி முதல் 20 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 93 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.




