இலங்கை செய்தி

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு தீவிரம்

ஜுலை மாதத்தில் கடந்துள்ள 2 நாட்களில் மாத்திரம் 2,278 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஜனவரி முதல் ஜுலை 02 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் 57 ஆயிரத்து 668 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளிகள் பதிவாகிவருகின்றனர்.

ஜுலை மாதத்தில் கடந்துள்ள 2 நாட்களில் மாத்திரம் 2,278 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயினால் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர்.

நாட்டில் 14 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் இருந்தாலும் மேல் மாகாணத்திலேயே நிலைமை மோசமாக உள்ளது. மேல் மாகாணத்தில் மாத்திரம் 30 ஆயிரத்து 253 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது மொத்த பாதிப்பில் 52.46 சதவீதமாகும் என சுகாதார அமைச்சின் தரவுகளில் இருந்து அறியமுடிகின்றது.

நாட்டில் 124 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரவுகளில் டெங்கு பாதிப்பு தீவிரமாக உள்ளது என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை