உலகம் செய்தி முக்கிய செய்திகள்

40 ஆண்டுகளில் இல்லாத சரிவு: யென் நாணயத்தை மீட்டெடுக்க ஜப்பானுடன் கரம்கோர்த்த அமெரிக்கா

ஜப்பானிய நாணயமான 'யென்' (Yen) 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத சரிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அதன் சரிவைத் தடுக்கும் வகையில் ஜப்பானும் அமெரிக்காவும் இணைந்து 'யென்' நாணயங்களைக் கொள்முதல் செய்யும் கூட்டுத் தலையீட்டை (Yen-buying intervention) மேற்கொண்டதாக ஜப்பான் நிதியமைச்சு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

ஜப்பானிய நாணயமான ‘யென்’ (Yen) 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத சரிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அதன் சரிவைத் தடுக்கும் வகையில் ஜப்பானும் அமெரிக்காவும் இணைந்து ‘யென்’ நாணயங்களைக் கொள்முதல் செய்யும் கூட்டுத் தலையீட்டை (Yen-buying intervention) மேற்கொண்டதாக ஜப்பான் நிதியமைச்சு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

மேலும், தேவைப்பட்டால் இத்தகைய நடவடிக்கைகளை மேலும் தொடரத் தயங்கமாட்டோம் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

யென் நாணயம் மற்றும் ஜப்பானிய அரசுக் கடன்பத்திரங்களின் (JGBs) விற்பனைச் சரிவு, அமெரிக்கக் கடன் பத்திரங்களின் வட்டி விகிதங்களை மேலும் உயர்த்துவது போன்ற உலகளாவிய பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்துவதைத் தடுப்பதற்கான இரு நாடுகளின் உறுதியான முடிவையே இந்த நடவடிக்கை காட்டுகிறது என்று பொருளாதாரப் பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு கிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவு தந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, யென் நாணயத்தின் மதிப்பைக் குறைக்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டன. அதற்குப் பிறகு, இவ்விரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் முதல் கூட்டு நடவடிக்கை இதுவேயாகும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், நட்பு ரீதியாகவும் உலகப் பொருளாதாரத்திற்கு உதவும் வகையிலும் ஜப்பான் தனது நாணயத்தின் மதிப்பை உயர்த்த அமெரிக்கா உதவி வருவதாகத் தெரிவித்தார்.

ஆசியாவில் ஒரு முக்கிய மூலோபாய கூட்டாளியாக ஜப்பானுக்கு உதவுவதைத் தவிர, டிரம்பின் வரி விதிப்புகளால் கிடைத்த நன்மைகளை யென் நாணயத்தின் பலவீனம் சீர்குலைப்பதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு உதவும் என்று பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.தலைப்புகள் சில தரவும்

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி