உலகம் செய்தி

அமெரிக்க சூப்பர்மாடல் கார்லி க்ளோஸூக்கும் டிரம்புக்கும் இடையில் என்ன உறவு?

33 வயதான கார்லி க்ளோஸ், தான் குடியரசுக் கட்சியை ஆதரிக்கவில்லை என்றும், ஆனால் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிப்பவர் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சூப்பர்மாடல் கார்லி க்ளோஸ், குடும்ப உறவினராக இருந்தபோதிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை ஒருபோதும் சந்தித்ததில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

ப்ளூம்பெர்க் ஒரிஜினல்ஸ்க்கு அளித்த செவ்வி ஒன்றில், தான் ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்ததே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தன் கணவரின் குடும்பத்தின் அரசியல் சார்பு குறித்துக் கேட்டபோது, ​​”நான் யார், என் வாழ்க்கை எந்த விழுமியங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது, எனக்கு முக்கியமான பிரச்சினைகள் எவை என்பது எனக்குத் தெரியும்.

நான் என் அடையாளத்தை ஒருபோதும் இழந்ததில்லை, ஆனால் இது என் கணவரின் குடும்பம்” என்று கார்லி க்ளோஸ் தெரிவித்துள்ளார்.

33 வயதான கார்லி க்ளோஸ், தான் குடியரசுக் கட்சியை ஆதரிக்கவில்லை என்றும், ஆனால் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிப்பவர் என்றும் தெரிவித்துள்ளார்.

மாறுபட்ட அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்களுடன் உறவுகளைப் பேணுவது சாத்தியமே என்றும், அமெரிக்கா எப்போதுமே உரையாடலுக்கும் கருத்து வேறுபாடுகளை மதிப்பதற்கும் ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருந்தது என்றும் கூறுகிறார்.

கார்லி க்ளோஸ், டிரம்பின் மருமகனான ஜாரெட் குஷ்னரின் சகோதரரான ஜோஷுவா குஷ்னரை 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி