கேகாலையில் இரு பேருந்துகள் மோதி கோர விபத்து – 20 பயணிகள் படுகாயம்
கேகாலையில் இன்று காலை இரு பேருந்துகள் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
கேகாலையில் உள்ள கரண்டுபான சந்திப்பில் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்து ஒன்று தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 20 பயணிகள் காயமடைந்தததாகவும், அவர்கள் கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கேகாலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




