ஐரோப்பா செய்தி

முறைப்படி மன்னிப்பு கோரி பிரித்தானிய பிரதமர்

லண்டனிலிருந்து வெளிவந்த ஒரு ஊடக அறிக்கையின்படி, 1950கள் முதல் 1970கள் வரை, திருமணமாகாமல் குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பிற்காகக் கொடுக்குமாறு வற்புறுத்தப்பட்டனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குழந்தைகளைக் கட்டாயத் தத்தெடுப்புக்கு உட்படுத்தியதில் அரசின் பங்கு குறித்து, பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் முறைப்படி மன்னிப்புக் கோரியுள்ளார்.

லண்டனிலிருந்து வெளிவந்த ஒரு ஊடக அறிக்கையின்படி, 1950கள் முதல் 1970கள் வரை, திருமணமாகாமல் குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பிற்காகக் கொடுக்குமாறு வற்புறுத்தப்பட்டனர்.

185,000 தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பிற்காகக் கொடுக்க வற்புறுத்தப்பட்டதாக ஊடக அறிக்கைகள் மதிப்பிட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு நேர்ந்தது நமது வரலாற்றில் ஒரு கறை என்று பிரதமர் தெரிவித்துள்ளார்..

நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், “வெட்கம் உங்களுடையதல்ல, வெட்கம் ஒருபோதும் உங்களுடையதாக இருந்ததில்லை, வெட்கம் எங்களுடையது” என்று தெரிவித்துள்ளார்

ஊடக அறிக்கைகளின்படி, பல ஆண்டுகால பிரச்சாரம் மற்றும் நாடாளுமன்ற அறிக்கைகளுக்குப் பிறகு அரசாங்கம் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், பிரச்சாரகர்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு பிரதமரையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி