பழிவாங்கும் அறைகூவலுக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
ஹேர்முஸ் நீரிணை பாதை மூடப்படுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப்பு வழியாகச் சென்ற வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்குப் பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்நிலையிலேயே ஈரான் மேற்படி முடிவை எடுத்துள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), இந்த சர்வதேச கடல்வழிப் பாதை மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப்பை ஈரான் மூடியுள்ள இந்த நடவடிக்கை, அதன் புதிய உச்சத் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி பொறுப்பேற்ற பிறகு வெளியிட்ட முதல் பொது அறிக்கையில் விடுத்த “பழிவாங்கும்” அழைப்பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.




